மாற்றுப் பள்ளி கோரி கோர்ட்டுக்கு வந்த குழந்தைகள்!
சென்னை:
போலீஸ் உதவியுடன் இடிக்கப்பட்ட சென்னை பள்ளிக்கரணை பாவாணர் தமிழ் வழிப் பள்ளியின் மாணவர்கள் 70 பேர்தங்களை வேறு பள்ளியில் சேர்க்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இன்று சீருடையுடன் வந்ததால் சிறிது நேரம் பரபரப்புநிலவியது.
இதையடுத்து பள்ளியைக் காலி செய்யுமாறு அவர் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பினார். இருப்பினும் பள்ளியைக் காலிசெய்ய கால அவகாசம் தேவை என்று பள்ளி நிர்வாகம் கோரியிருந்தது. ஆனால் அதை கண்டுகொள்ளாத ராமசாமி, நீதிமன்றஉத்தரவுடன் கடந்த 19ம் தேதி இரவு போலீஸ் படையுடன் அங்கு வந்தார்.
பள்ளிக் கட்டடம் புல்டோசர் மூலம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. பள்ளியில் இருந்த பொருட்கள், மாணவர்களின்சான்றிதழ்கள் கிணற்றில் தூக்கி வீசப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர்களும், அப்பகுதிபொதுமக்களும் சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளிக் கட்டடம் இடிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பள்ளி நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்குஇன்று நீதிபதி பி.டி.தினகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பள்ளியில் படித்து வந்த 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தங்களது சீருடையுடன் நீதிமன்றத்திற்குவந்திருந்தனர். அனைவரும் வழக்கு நடந்த நீதிமன்ற அறைக்கு முன்பாக கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வழக்கை விசாத்த நீதிபதி தினகரன், பாவாணர் பள்ளியில் படித்து வந்த குழந்தைகளை வேறு அரசுப் பள்ளியிலோ அல்லதுதனியார் பள்ளியிலோ சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கூடுதல் அரசு வழக்கறிஞர் சோமையாஜுலுவுக்கு அறிவுறுத்தினார்.பின்னர் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications