4 குழந்தைகளை உயிரோடு எரித்து தந்தையும் சாவு!
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் அருகே மனைவி, நான்கு குழந்தைகளுடன் தந்தையும் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதில் அவரதுமனைவி மட்டும் உயிர் பிழைத்தார்.
சுப்ரமணியம் சரியாக வேலைக்குச் செல்லாமல் இருந்ததால் அவருக்கும் யோகராணிக்கும் இடையே அடிக்கடி தகராறுஏற்படுமாம். இந் நிலையில் சுப்ரமணியத்திற்கு சென்னையில் ஒரு ஹோட்டலில் வேலை கிடைத்துள்ளது. இதையடுத்துஅவர்சென்னை சென்று விட்டார். அங்கு வேலை பார்த்தும் கூட, வீட்டிற்குப் பணம் கொடுக்காமல் இருந்துள்ளார்.
இந் நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சிக்கு வந்துள்ளார் சுப்ரமணியம். அப்போது அவருக்கும், யோகராணிக்கும்இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறு காரணமாக சுப்ரமணியம் ஆத்திரமடைந்தார்.
நள்ளிரவு 1.30 மணியளவில் எழுந்த சுப்ரமணியம், மனைவி, குழந்தைகளை கொன்று விட வேண்டும் என்ற ஆத்திரத்துடன்வீட்டில்இருந்த பெட்ரோலை எடுத்து நான்கு பேர் மீதும் ஊற்றி தீவைத்துள்ளார்.
இதில் 5 பேரும் தீயில் கருகினர். அப்போது, எங்களை அழித்து விட்டு நீ மட்டும் வாழ்ந்து விடுவாயா என்று சத்தம் போட்டுக்கொண்டே கணவர் சுப்ரமணியத்தை, யோகராணி எரியும் தீயுடன் கட்டிப் பிடித்துக் கொண்டார். இதனால் சுப்ரமணியமும் தீயில்கருகினார்.
6 பேரையும் அக்கம் பக்கத்தில் இருந்தோர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனிக்காமல்இன்று காலை சுப்ரமணியமும், நான்கு குழந்தைகளும் பரிதாபமாக இறந்தனர். யோகராணி உயிருக்கு ஆபத்தான நிலையில்சிகிச்சை பெற்று வருகிறார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தீயில் கருகி இறந்தது திருவானைக்காவல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications