சொத்துக் குவிப்பு வழக்கு: தன்னையும் விடுவிக்க கோருகிறார் தினகரன்
பெங்களூர்:
சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று பெங்களூர் தனி நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் எம்.பி.இன்று மனு தாக்கல் செய்தார். இது குறித்த விசாரணையை நீதிபதி பச்சாப்பூரே வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
இந் நிலையில் கடந்த வாரம் இளவரசி தனது வழக்கறிஞர் கோபி மூலமாக நீதிபதி பச்சாப்பூரே முன்பு ஒரு மனுவைத் தாக்கல்செய்தார்.
அதில், இந்த வழக்குக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் நிரபராதி, குற்றமற்றவள். எனவே இவ் வழக்கிலிருந்துஎன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவுக்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, சாட்சிகள் விசாரணையும் முடிவடைந்து விட்டது.
இந்த நிலையில் இப்படி ஒரு மனுவைத் தாக்கல் செய்வது தவறானது. இந்த மனுவை நீதிமன்றம் ஏற்கக் கூடாது என்றார். பின்னர்இந்த மனு மீதான வாதத்தை நீதிபதி ஒத்தி வைத்தார்.
இன்று தொடர்ந்து வாதம் நடைபெற்றது. இன்றும் இளவரசி தாக்கல் செய்த மனுவுக்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்புதெரிவித்தார்.
வழக்கு விசாரணை முக்கியமான கட்டத்தில் இருக்கும் இந்த நிலையில் இளவரசியின் கோரிக்கையை ஏற்கக் கூடாது என்றுஅவர் கூறினார்.
இதற்கிடையே இந்த வழக்கிலிருந்து தன்னையும் விடுவிக்க வேண்டும் என்று கோரி டிடிவி தினகரன், எம்.பி. ஒரு மனு தாக்கல்செய்தார். இந்த மனுவை வியாழக்கிழமை விசாரிப்பதாக நீதிபிதி பச்சாப்பூரே தெரிவித்தார்.
முன்னதாக தினகரனின் வழக்கறிஞர் ஜீன சேனன், இரு தரப்பு வாதத்தை மேலும் சில நாட்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்றுகோரிக்கை விடுத்தார். அதற்கு நீதிபதி மறுப்பு தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, வரும் சனிக்கிழமை வரையாவது வாதத்தை ஒத்தி வைக்க வேண்டும். இல்லையென்றால் எனக்குப் பதிலாகவேறு யாராவது தான் ஆஜராக வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று ஜீன சேனன் கூறினார்.
இதனால் கோபமடைந்த நீதிபதி பச்சாப்பூரே, நீதிமன்றத்தில் என்ன விலை பேசுகிறீர்களா? என்று கேட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications