காவிரி: மத்தியக் குழு ஆய்வு நடத்த பிரதமர் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காவிரி நீர் பிரச்சினை குறித்து தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் மத்தியக் குழு விரைவில் ஆய்வு செய்யும் என்றுஜெயலலிதாவிடம் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்குரிய காவிரி நீரை கர்நாடகம் திறந்து விட வலியுறுத்த வேண்டும். இந்தப் பிரச்சினையில் உடனடியாக தலையிடவேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடந்த 16ம் தேதி ஜெயலலிதா கடிதம் எழுதினார்.

இதைத் தொடர்ந்து அதிமுக சார்பில் கடந்த 22ம் தேதி மாநிலம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்புஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கை நேர்ல் சந்தித்து இந்தக் கோரிக்கையைவலியுறுத்த ஜெயலலிதா முடிவு செய்தார்.

இதையடுத்து இன்று காலை அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லி விமான நிலையத்தில் முதல்வர் ஜெயலலிதாவைஅதிமுக எம்.பி.க்கள் வரவேற்றனர்.

இதன் பிறகு 10 மணியளவில் பிரதமர் அலுவலகத்திற்கு சென்ற ஜெயலலிதா, மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார்.அப்போது காவிரி பிரச்சினை தொடர்பாக விரிவான மனு ஒன்றை பிரதமரிடம் அவர் கொடுத்தார்.

கர்நாடகம் தொடர்ந்து தண்ணீர் திறந்து விட மறுப்பதால் காவிரி டெல்டா விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகஜெயலலிதா, பிரதமரிடம் தெரிவித்தார். எனவே காவிரியில் உடனடியாக தண்ணீர் திறந்து விட கர்நாடகத்தை வலியுறுத்தவேண்டும் என்று ஜெயலலிதா, பிரதமரிடம் கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங்,தமிழக விவசாயிகளின் நலனைக் காக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.இரு மாநில விவசாயிகளின் நலனும் மிக முக்கியமாகும். எனவே இது குறித்து ஆய்வு நடத்துவதற்காக விரைவில் இருமாநிலங்களுக்கும் மத்தியக் குழு அனுப்பப்படும் என்று ஜெயலலிதாவிடம் உறுதியளித்தார்.

இதற்கிடையே நேற்று திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பிரதமரை சந்தித்து பேசினர். அப்போது அவர்களிடம் இன்றே(நேற்று) கர்நாடக முதல்வரிடம் காவிரி நீரை திறந்து விடுவது குறித்து பேசுவதாக கூறியிருந்தார். இதன் படி நேற்று இரவேமன்மோகன் சிங், கர்நாடக முதல்வர் தரம் சிங்கிடம் போனில் பேசினார்.

தான் காவிரி பிரச்சினை குறித்து கர்நாடக முதல்வரிடம் நேற்றே பேசிவிட்டதாக ஜெயலலிதாவிடம் பிரதமர் தெரிவித்தார்.

ஜெயலலிதாவுடன் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், பொன்னையன், தலைமைச் செயலாளர் நாராயணன் உள்ளிட்டஅதிகாரிகள் சென்றனர்.

இவர்கள் தவிர காவிரி டெல்டாப் பகுதி அதிமுக எம்.எல்.ஏக்களும் ஜெயலலிதாவுடன் பிரதமரை சந்திக்கும் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

பிரதமரை சந்தித்த ஜெயலலிதா இன்று பிற்பகலில் சென்னை திரும்புகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+