அடுத்த பிறவியில் பாடகியாக வேண்டும்: ஜெ.வின் ஆசை!
சென்னை:
அடுத்த பிறவி ஒன்று இருந்தால் அதில் நான் பாடகியாக பிறக்க வேண்டும். பாலமுரளி கிருஷ்ணாவின் சிஷ்யை ஆக வேண்டும்என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கந்தர்வ கான சாம்ராட் என்ற விருதை பாலமுரளிகிருஷ்ணாவுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் பாலமுரளி கிருஷ்ணா பாடும்போது, ஜெயலலிதா பெயரில் ஒரு ராகத்தை உருவாக்கிஅதை ஜெயலலிதாவுக்கு அர்ப்பணம் செய்வதாக தெரிவித்தார்.
பின்னர் ஜெயலலிதா பேசுகையில், பாலமுரளி கிருஷ்ணாவைக் கவுரப்படுத்துவதற்காகவே நான் இங்கு வந்தேன். ஆனால்,நான் எதிர்பாராத வகையில், ஒரு புதிய ராகத்தை உருவாக்கி இரு கீர்த்திகளை அந்த ராகத்தில் அமைத்து அதற்கு எனதுபெயரையும் சூட்டி எனக்கு அர்ப்பணித்துள்ளார்.
இது நான் கனவிலும் எதிர்பாராதது. என் வாழ்வின் இறுதி நாள் வரை எனக்களிக்கப்பட்ட இந்த கவுரவம் நெஞ்சிலேயேஇருக்கும். இந்த நேரத்தில் எனக்குள் இருக்கும் விருப்பம் ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன்.
இன்னொரு பிறவி என்று ஒன்று இருந்தால் நான் பாலநபரளி கிருஷ்ணாவின் சிஷ்யையாக பிறக்க வேண்டும். பாடகியாக ஆகவேண்டும். அவரிடம் கர்நாடக இசை பயில வேண்டும். நல்ல பாடகி என்று அவரிடம் சபாஷ் பெற வேண்டும்.
பாலமுரளி கிருஷ்ணா பாரத ரத்னா விருது பெற முற்றிலும் தகுதியானவர். அந்த நாளும் வரும். அவர் பாரத ரத்னா விருதுபெறுவதை நான் பார்ப்பேன். இதன் மூலம் இந்தியாவுக்கும் பெருமை சேரும் என்றார் ஜெயலலிதா.
நிகழ்ச்சியில் சுமார் 3 மணி நேரம் அமர்ந்திருந்தார் ஜெயலலிதா. பாலமுரளி கிருஷ்ணாவின் பாட்டுக் கச்சேரி, 75 பாடகர்கள்ஒன்று சேர்ந்து பாட, 75 பேர் ஆட இடம் பெற்ற கலைநிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications