பஞ்சு வாங்கிய வழக்கில் ஜெயலட்சுமி கைதாகிறார்?

Subscribe to Oneindia Tamil

சங்கரன்கோவில்:

விருதுநகர் மாவட்டம் சங்கரன்கோவில் பஞ்சு வியாபாரியிடம் பஞ்சு கொள்முதல் செய்து ரூ. 27 லட்சம் பணத்தை மோசடிசெய்ததாக ஜெயலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சங்கரன் கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் ஜெயலட்சுமி குடும்பத்தோடு விரைவில் கைதாவார் எனத் தெரிகிறது.

கடந்த 1995ம் ஆண்டு ஜெயலட்சுமி, அவரது சகோதரர்கள் ராஜாராம், சீனிவாசன் ஆகியோர் சேர்ந்து உளுந்தூர்பேட்டையில்ஜெயபாலன் டெக்ஸ்டைல்ஸ் என்ற பெயரில் பஞ்சு வியாபாரம் செய்தனர்.

அப்போது சங்கரன்கோவிலைச் சேர்ந்தமொத்த வியாபாரி பிரகாஷ் மூர்த்தி என்பவரிடம் பஞ்சு கொள்முதல் செய்தனர். ரூ. 40லட்சம் அளவுக்கு ஜெயலட்சுமியும், அவரது சகோதரர்களும் பஞ்சு கொள்முதல் செய்துள்ளனர்.

இதில் ரொக்கமாக கொடுத்த தொகை போக மீதமுள்ள தொகையான ரூ. 27லட்சத்திற்கு காசோலைகளை ஜெயலட்சுமிகொடுத்துள்ளார். ஆனால் அவரது வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் காசோலை திரும்பி வந்து விட்டது.

இதையடுத்து சங்கரன் கோவில் காவல் நிலையத்தில் பிரகாஷ் மூர்த்தி புகார் கொடுத்தார். இருப்பினும் அப்போது எந்தநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஜெயலட்சுமி விவகாரம் பரபரப்பான கட்டத்தில் இருந்தபோது பிரகாஷ் மூர்த்தி மீண்டும்ஒரு புகாரை சங்கரன் கோவில் காவல் நிலையத்தில் கொடுத்தார்.

அத்தோடு சிபிஐயிடமும் புகார் கொடுத்தார். அத்தோடு நில்லாமல் சங்கரன் கோவில் குற்றவியல் நீதிமன்றத்திலும் வழக்குதொடர்ந்தார். அந்த வழக்கில், சங்கரன் கோவில் போலீஸார் தனது புகார் மீது நடவடிக்கை எடுக்க மறுப்பதாக கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரவணக்குமார், ஜெயலட்சுமி, அவரது சகோதரர்கள் ராஜாராம், சீனிவாசன், தந்தைஅழகிரிசாமி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு கடந்த மாதம் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து தற்போது ஜெயலட்சுமி, ராஜாராம், சீனிவாசன், அழகிரிசாமி ஆகியோர் மீது சங்கரன்கோவில் போலீஸார்வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் ஜெயலட்சுமி, குடும்பத்தோடு எந்த நேரமும் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஜெயலட்சுமிவிவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+