கேரளா, அந்தமானில் நில நடுக்கம்
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
கேரளாவின் தென் கடலோர பகுதி மற்றும் அந்தமானில் இன்று லேசான நில நடுக்கம் ஏற்பட்டது.
இந் நிலையில் அந்தமானில் இன்று காலை 7.47 மணிக்கும், 8.56 மணிக்கும் நில நடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவுகோலில் இது முறையே 5.3 மற்றும் 5.7 ஆக பதிவாகியிருந்தது. இந்த நில நடுக்கத்தால் சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல்இல்லை.
இதே போல கேரளாவின் தென் கடலோர பகுதிகளில் இன்று காலை லேசான நில நடுக்கம் உணரப்பட்டது. அதிகாலை 4.15மணியளவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 3.6ஆக பதிவாகியிருந்தது.
நில நடுக்கத்தின் அளவு குறைந்த சக்தி கொண்டதாக இருந்ததால் அதிகமாக மக்களால் இதை உணர முடியவில்லை. ஆனாலும்நில அதிர்வை பதிவு செய்யும் கருவியில் பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications