சென்னை பால ஊழல்: கருணாநிதி, ஸ்டாலின் மீது விரைவில் குற்றப்பத்திரிகை!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை நேப்பியர் பால விரிவாக்க பணிகளில் ரூ. 28 லட்சம் அளவுக்கு முறைகேடு நடந்தது தொடர்பாக அப்போதுமுதல்வராக இருந்த திமுக தலைவர் கருணாநிதி, மேயராக இருந்த மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 10 பேர் மீதான வழக்கில்விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

கடந்த திமுக ஆட்சியில் சென்னை அண்ணா சமாதி அருகே உள்ள பழமையான நேப்பியர் பாலம் விரிவுபடுத்தப்பட்டு அதன்அருகேயே இன்னொரு பாலம் கட்டப்பட்டது.

இந்த பாலம் கட்டும் பணியில் தரம் வாய்ந்த டிஸ்கான் கம்பிகளைப் பயன்படுத்துவதாக கூறி தரம் இல்லாத விசாகப்பட்டனம்கம்பிகளை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பயன்படுத்தியதாகவும், இதனால் மாநகராட்சிக்கு ரூ. 28 லட்சம் அளவுக்குநஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியும், இரண்டாவது குற்றவாளியாகமேயராக இருந்த மு.க.ஸ்டாலின் மற்றும் 8 மாநகராட்சி அதிகாரிகள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந் நிலையில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 8 மாநகராட்சி அதிகாரிகள் மீதான நடவடிக்கை குறித்து விவாதிக்கமாநகராட்சி நியமனக் குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சிக் கட்டடமான ரிப்பன் பில்டிங்கில்செவ்வாய்க்கிழமை நடந்தது. மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில், குற்றம் சாட்டப்பட்டுள்ள மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரை செய்வதுஎன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள 8 பேரில் 6 பேர் ஏற்கனவே, சென்னை நகரில் சிறு மேம்பாலங்கள் கட்டப்பட்ட வழக்கிலும்தொடர்பு கொண்டுள்ளனர். ஏற்கனவே அந்த வழக்கில் அவர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளன. எனவே மற்ற 2 பேர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க கூட்டத்தில்முடிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிகிறது. எனவே விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை நகரில் சிறு மேம்பாலங்கள் கட்டியதில் முறைகேடு நடந்ததாக கூறி தொடரப்பட்டுள்ள வழக்கிலும் கருணாநிதி,ஸ்டாலின் ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+