கருணாநிதிக்கு கூட்டணியிலேயே மரியாதை கிடையாது: தீப்பொறி நக்கல்!
மதுரை:
திமுக தலைவர் கருணாநிதிக்கு அவரது கூட்டணிக் கட்சித் தலைவர்களிடையே மரியாதை கிடையாது, அவர் சொல்வதைகூட்டணித் தலைவர்கள் மதிப்பதே இல்லை. இந்த நிலையில் மக்கள் எப்படி கருணாநிதி கூறுவதை கேட்பார்கள் என்று அதிமுகதலைமைக் கழக பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் நக்கலடித்துள்ளார்.
அந்த அளவுக்கு அவரது பேச்சில் ஆபாச அனல் பறக்கும். கருணாநிதியிடம் மருத்துவ உதவி கேட்டு அது கிடைக்காமல்போனதால் விரக்தியில் இருந்த தீப்பொறியாரை, ரூ. 5 லட்சம் நிதியுதவி கொடுத்து அதிமுகவுக்கு இழுத்துக் கொண்டார்ஜெயலலிதா.
தற்போது தென் மாவட்ட அதிமுகவின் முக்கியப் பேச்சாளராக விளங்குகிறார் தீப்பொறி ஆறுமுகம். மதுரை முனிச்சாலையில்அதிமுக பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தீப்பொறி ஆறுமுகம் பேசுகையில் கருணாநிதியை கடுமையாக சாடி நக்கலடித்தார்.
அவரது பேச்சிலிருந்து ஆபாசம் தவிர்த்த சில துளிகள் .. 40 மக்களவைத் தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதும் இனிநாம் தான் தமிழ்நாட்டில், அதிமுக அவ்வளவு தான் என்று மமதையோடு ஒவ்வொரு தலைவரும் பேசிக் கொண்டு திரிந்தனர்.
ஆனால் காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தலில் இந்த 7 கட்சிக் கூட்டணிக்கு அம்மா சரியான பதிலடி கொடுத்துவெற்றி வாகை சூடினார். இந்த படுதோல்வி கருணாநிதிக்கு மட்டுமல்ல, அவரது கூட்டணியில் உள்ள தலைவர்கள் அத்தனைபேருக்கும் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டது.
இந்த வெறுப்பில் தான் தமிழக அரசு மீது நாள் தோறும் ஏதாவது ஒரு புகாரைக் கூறிக் கொண்டு வருகிறார்கள். 7 கட்சியோடுஅல்ல எத்தனை கட்சியோடு கருணாநிதி கூட்டணி அமைத்துப் போட்டியிட்டாலும் அதிமுகவை வெல்ல முடியாது.
கருணாநிதிக்கு முதலில் அவரது கூட்டணியிலேயே மரியாதை கிடையாது. அவர் சொல்வதை கூட்டணிக் கட்சித்தலைவர்களே மதிப்பதில்லை, கேட்பதில்லை. பிறகு எப்படி மக்கள் கேட்பார்கள்? வெறும் கூட்டணி பலத்தில் தான் திமுக வண்டிஓடிக் கொண்டிருக்கிறது.
கூட்டணி இருந்தால் தான் கருணாநிதி எடுபடுவார். ஆனால் அம்மா அப்படி அல்ல, மக்களை நம்பி இருக்கிறார் அவர்.மக்களின் கூட்டணியுடன் தான் ஆட்சியில் இருக்கிறார். இனி எந்தத் தேர்தல் வந்தாலும் அதிமுக தான் வெற்றி பெறும்,அம்மாதான் முதல்வர் ஆவார் என்று பேசினார் தீப்பொறியார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications