ஜெயலலிதாவின் திறந்த மனம்: பாஜக கிண்டல்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா எப்போது மனதைத் திறப்பார் எப்போது அல்லது மூடுவார் என்பது எங்களுக்குத் தெரியாது என பாஜகசெய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறினார்.
ஆர்எஸ்எஸ்-பாஜக இடையே நிலவிய குழப்பங்கள் நீங்கிவிட்டன. அடிப்படைக் கொள்கைகளில் இருந்து விலகிச் செல்லக்கூடாது என்று பாஜகவை ஆர்எஸ்எஎஸ் எச்சரித்தது. அவ்வளவு தான்.
எங்களைப் பொறுத்தவரை அத்வானியே கட்சியின் தலைவராகவும் நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவராகவும் நீண்ட காலம்நீடிப்பார்.
ஒத்திவைக்கப்பட்ட பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் வரும் செப்டம்பரில் தமிழகத்தில் நடக்கும். அடுத்த ஆண்டு தேர்தலைசந்திக்கும் 6 மாநிலங்களில் கட்சியின் நிலை குறித்து விவாதிக்கவுள்ளோம் என்றார்.
கூட்டணி விஷயத்தில் தான் திறந்த மனதுடன் இருப்பதாக முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறாரே என்று கேட்டபோதுபதிலளித்த ஜாவேத்கர்,
தமிழகத்தில் தனித்துப் போட்டியிடுவது என்பதில் தெளிவாக இருக்கிறோம். ஜெயலலிதா எப்போது மனதைத் திறப்பார்,அல்லது எப்போது மூடுவார் என்பது எங்களுக்குத் தெரியாது என்றார்.












Click it and Unblock the Notifications