வறுமையால் குழந்தை கொலை: தாயின் தண்டனையைக் குறைக்க ஆளுநருக்கு பரிந்துரை
சென்னை:
வறுமையில் வாடியதால் 4 மாத கைக் குழந்தையை கிணற்றில் வீசிக் கொன்ற தாய்க்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையைக்குறைப்பது குறித்த முடிவை ஆளுநரிடம் விடுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது.
வறுமையில் வாடிய பீவி, தனது 4 மாத கைக்குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்தார். இதையடுத்து வெள்ளக்கோவில்போலீஸார் அவரைக் கைது செய்து ஈரோடு செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் கைக்குழந்தையைகொலை செய்த குற்றத்திற்காக பீவிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பினால் அதிர்ச்சி அடைந்த பீவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். 4 வயதுக் குழந்தையைவளர்க்க வேண்டிய பொறுப்பு உள்ளதால் தன்னை விடுவிக்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பி.டி.தினகரன், சொக்கலிங்கம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பீவிக்குவிதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், வறுமை, கணவர் பிரிந்து சென்றது ஆகியவற்றால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக இந்த செயலை மனுதாரர்செய்ததாக அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
இந்த வழக்கு ஆளுநருக்கு பரிந்துரை செய்யக் கூடிய வழக்காகும். அரசியல் சட்டம் 161வது சட்டப் பிரிவின் கீழ்,தண்டனையைக் குறைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு. இன்னொரு குழந்தையைக் காப்பாற்ற வேண்டிய நிலையில்இப்பெண் உள்ளார்.
எனவே இத்தண்டனையைக் குறைக்க இவ்வழக்கை ஆளுநருக்குப் பரிந்துரை செய்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications