மதுரை உயர்நீதிமன்றத்திலிருந்து 3 மாவட்டங்கள் பிரிப்பு?
மதுரை:
மதுரை உயர்நீதிமன்றக் கிளையுடன் தற்போது இணைந்திருக்கும் திருச்சி, தஞ்சாவூர், கரூர் ஆகிய 3 மாவட்டங்களையும் பிரித்துசென்னை உயர்நீதிமன்றத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதால் மதுரைவழக்கறிஞர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
முதலில் மதுரை கிளையில் 16 மாவட்டங்கள் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றவழக்கறிஞர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக பெரம்பலூர், நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் சென்னையுடன்தொடர்ந்து நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து 13 மாவட்ட வழக்குகள் மட்டும் தற்போது மதுரை கிளையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில்திருச்சி, தஞ்சை மற்றும் கரூர் மாவட்டங்களை சென்னை உயர்நீதிமன்றத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் நியமித்த 8 நீதிபதிகள் கொண்ட குழு இதுதொடர்பான அறிக்கையை தலைமை நீதிபதிக்கு அனுப்பிவைத்தது. இதைத் தொடர்ந்து மதுரை கிளையிலிருந்து இந்த மாவட்டங்களை சென்னைக்கு மாற்றுவது தொடர்பான கோப்புகுடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மதுரை மாவட்ட வழக்கறிஞர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி உள்ளிட்ட 3மாவட்டங்களிலிருந்தும் அதிக அளவில் வழக்குகள் வருகின்றன.
எனவே இவற்றை மதுரை கிளையிலிருந்து மாற்றுவதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். தங்களது எதிர்ப்பை மீறிசென்னையுடன் இவற்றை சேர்த்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட வழக்கறிஞர்கள் மட்டும் தென் மாவட்ட வழக்கறிஞர்களுடன்சேர்ந்து போராட்டத்தை நடத்த மதுரை வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications