கலாம் இன்று கேரளா வருகை: சட்டமன்றத்தில் உரை
டெல்லி:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று (27ம் தேதி) கேரளா செல்கிறார். அங்கு பல்வேறுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர் நாளை கேரள சட்டசபையில் உரையாற்றுகிறார்.
நாளை (28ம் தேதி) கேரள சட்டசபையில் கலாம் உரையாற்றுகிறார். அவருக்கு முன்னதாக முதல்வர் உம்மன் சாண்டி, சபாநாயகர்தேரம்பில் ராமகிருஷ்ணன், எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன் ஆகியோர் உரையாற்றுவார்கள்.
இதன் பிறகு 11 மணியளவில் தும்பா ராக்கெட் நிலையத்தில் பிஎஸ்எல்வி ராக்கெட் பறக்க விடப்பட்ட வெள்ளி விழாவில்கலந்து கொள்கிறார். பிற்பகல் 2.30 மணியளவில் திருவனந்தபுரம் கனகக்குன்று அரண்மனையில் நடைபெறும் கருத்தரங்கிலும்,3.40 மணியளவில் கவடியார் கட்டிட அடிக்கல் நாட்டு விழாவிலும் கலாம் கலந்து கொள்கிறார்.
தொடர்ந்து 4.30 மணியளவில் கவடியார் அரண்மனையில் திருவிதாங்கூர் ராஜ குடும்பத்தினரை சந்தித்து பேசும் கலாம், 5மணிக்கு திருவனந்தபுரம் கார்க்கி பவன் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதன் பிறகு திருவனந்தபுரம் ஆளுநர் மாளிகையில்இந்தியா 2002 என்ற கலாம் எழுதிய புத்தகத்தின் மலையாளப் பதிப்பை வெளியிடுகிறார்.
29ம் தேதி காலடியில் சங்கராச்சாரியார் பிறந்த இடத்தை கலாம் பார்வையிடுகிறார். இதன் பிறகு காலடி சங்கரா இன்ஸ்டிடியூட்ஆப் என்ஜினியரிங் மாணவர்களுடன் அவர் கலந்துரையாடுகிறார்.
இதன் பிறகு ஆலப்புழை, கோட்டயம் ஆகிய இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு 1500 ஆண்டுகால பழமை வாய்ந்த சேரமண் ஜூம்மா மசூதியை கலாம் பார்வையிடுகிறார். இதன் பிறகு கலாம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
கலாம் வருகையையொட்டி கேரளாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications