சண்டை போடக் கூடாது: திமுகவினருக்கு கருணாநிதி அறிவுரை
சென்னை:
திமுகவினர் தங்களுக்குள் சண்டை போடக் கூடாது. ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என திமுக தலைவர்கருணாநிதி அறிவுரை கூறியுள்ளார்.
புதன்கிழமை தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட திமுக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். அவர்களுக்குகருணாநிதி ஏகப்பட்ட அறிவுரைகளை வாரி வழங்கினார்.
கருணாநிதி நிர்வாகிகள் மத்தியில் பேசுகையில், திமுகவினர் மத்தியில் மனவிரோதம், குரோதம் இருக்கக் கூடாது.அப்படி இருந்தால் அது அடிப்படையிலேயே விஷத்தைப் பாய்ச்சி விடும்.
ஒருவரையொருவர் மதித்து நடக்க கற்றுக் கொள்ள வேண்டும். தலைவரைப் பின்பற்றுவதாக கூறும் நீங்கள்அவர்களைப் போல பொறுமையுடன் இருக்க வேண்டாமா?
இரண்டு பிளவாக கட்சியைப் பிரித்து விடும் அளவுக்கு விரோதத்தை வளர்த்துக் கொள்ளக் கூடாது. அதனால்நமது சக்தி போய் விடும், கட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்தி விடும்.
குரங்குப் புண் சிறிதாகத் தான் தோன்றும். ஆனால் சொறிந்து சொறிந்து தன்னுடையே உயிருக்கே ஆபத்தைஏற்படுத்துகிற அளவுக்கு அதை குரங்கு ஆக்கி விடும். அதேபோல ஒரு சில இடத்திலே ஏற்பட்டிருக்கிற இந்தப்புண்ணை குரங்குப் புண்ணாக மாற்றி விடக் கூடாது.
அதிமுகவினர் இப்போதே தேர்தல் பணிகளில் ஈடுபடத் தொடங்கி விட்டார்கள் என்று வரும் செய்தி பொய்யல்ல.அதைப் படிக்கின்ற மக்கள் திமுக இன்னும் வேலையை தொடங்கவில்லை என்று பேச ஆரம்பித்தால் அதுவேநமக்கு சோர்வை ஏற்படுத்தி விடும்.
போஸ்டர் ஒட்டுவதில் கட்டுப்பாடு இருக்க வேண்டும். ஒட்டுவதில் தவறில்லை. மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறது.ஆனால் அதை பார்க்கும் பொதுமக்களுக்கு நம் மீது வெறுப்பு வந்து விடக் கூடாது என்று அறிவுரை வழங்கினார்கருணாநிதி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications