லண்டன்: கேரளாவில் தயாரான பெட்டிகளில் வந்த குண்டுகள்
திருவனந்தபுரம்:
கடந்த வாரம் லண்டனில் நடந்த தாக்குதலின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் கொண்டு வர பயன்படுத்தப்பட்டபிளாஸ்டிக் பெட்டிகள் கேரளாவில் தயாரானவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குண்டு வெடிப்பு சம்பவங்கள் குறித்து ஸ்காட்லாண்ட் யார்ட் போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். 2வதுமுறையாக நடந்த குண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் சோதனை செய்த போது தீவிரவாதிகள் வெடிகுண்டு கொண்டு வரப் பயன்படுத்தியபிளாஸ்டிக் பெட்டிகளின் சில பகுதிகள் கிடைத்தன. இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்திய போது அது பேபிலி பிளாஸ்டிக்அன்ட் தெர்மாவேர் என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டவை என தெரிய வந்தது.
இந்த நிறுவனம் கேரளாவில் திருவனந்தபுரம் அருகே உள்ள மனவிளையில் இயங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இங்கிருந்து தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பெட்டிகள் இங்கிலாந்து உட்பட பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுவருகிறது.
இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட டெல்டா 6250 என்ற 6 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் பெட்டியில்வைக்கப்பட்டு தான் குண்டுகள் கொண்டு வரப்பட்டன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
4பேர் கைது:
இது தொடர்பாக திருவனந்தபுரத்திலுள்ள அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சின்சன் பெர்னாண்டோவிடம் ஸ்காட்லாண்ட்யார்ட் போலீஸார் தொடர்பு கொண்டு விசாரணை செய்துள்ளனர்.
இது குறித்து சின்சன் கூறுகையில், எங்களது நிறுவனம் தயாரித்த பெட்டியில் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை எடுத்துச் சென்றதுஅதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது என்றார்.
ஸ்காட்லாண்ட் யார்ட் போலீஸார் திருவனந்தபுரம் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு பேசிய விவரம் இந்திய உளவுத்துளைறக்கோ, கேரள அரசுக்கோ தெரியாது. தற்போது தான் இந்த விவரம் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே லண்டன் குண்டு வெடிப்பு தொடர்பாக லண்டன் போலீஸார் இன்று 4 பேரை கைது செய்தனர். பர்மிங்ஹாமில்வைத்து இந்த நால்வரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications