மும்பையில் கனமழை: 100 பேர் பலி, ரயில்கள் ரத்து, விமான நிலையம் மூடப்பட்டது

Subscribe to Oneindia Tamil

மும்பை:

மகாராஷ்டிர மாநிலத்தில் கடும் மழையால் மும்பை உட்பட பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால்ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கனமழையைத் தொடர்ந்து இன்று மாலை 4 மணி வரை மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம் மூடப்படுவதாகஅறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக ரெய்காட்மாவட்டம் ஜூய் கிராமத்தில் உள்ள மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 60 பேர் பலியானதாகமுதலில் கூறப்பட்டது. ஆனால் இதில் 100க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கொங்கன் ரயில்வே பாதையின் பெரும்பகுதி மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால், பல்வேறு இடங்களுக்கு செல்லவேண்டிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு மீட்புப் படையினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மேலும், மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண

நடவடிக்கைகளை துரிதப்படுத்த ராணுவத்தினரும் கப்பற்படையினரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

கன மழையால் மும்பை நகரில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் மும்பை நகர மக்களின்அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மும்பை சென்ட்ரல் துறைமுகம், மற்றும் மேற்கு நோக்கி ஓடும் நகர்ப்புற ரயில்கள் நேற்று மாலை முதல் நிறுத்தப்பட்டன. மேற்குரயில்வே தனது அனைத்து ரயில்களையும் நேற்று மாலை 4 மணி முதல் நிறுத்தி விட்டன. மும்பையிலிருந்து நேற்று இரவுசென்னைக்குப் புறப்படும் புறப்படும் ரயிலும் ரத்து செய்யப்பட்டன.

மேகமூட்டம் காரணமாக மும்பையில் சத்ரபதி சிவாஜி விமான நிலையத்திற்கு வரவேண்டிய விமானங்கள் அகமதாபாத்துக்குதிருப்பி விடப்பட்டன. மேலும் பல விமானங்கள் தாமதமாக வந்தன.

பஸ், ரயில், விமானப் போக்குவரத்து மட்டுமல்லாமல் டெலிபோன் சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள்தகவல்களைப் பெற முடியாமல் பெரிதும் அவதிப்பட்டனர்.

மேற்கு மகாராஷ்டிராவைப் போல், கோவாவிலும் இடைவிடாத மழையினால் மக்களின் மாமூல் வாழ்க்கைபாதிக்கப்பட்டுள்ளது.

இன்றும் கனமழை, ரயில்கள் ரத்து:

மும்பையில் இன்றும் 2வது நாளாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நாட்டின் இதர பகுதிகளிலிருந்து மும்பை இன்னும்துண்டிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. நேற்று ரயில்களும் பஸ்களும் ஓடாததால் இரவில் ஊழியர்கள் தங்கள்அலுவலகங்களிலேயே தங்க நேரிட்டது.

விமானம் மற்றும் ரயில் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் உயிரிழப்பு பற்றிசரியான தகவல் கிடைக்கவில்லை. சென்னை இருந்து மும்பை செல்லும் 2 ரயில்கள் இன்று ரத்து செய்ப்பட்டுள்ளன. மேலும்கோவையிலிருந்து மும்பை செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கன மழையைத் தொடர்ந்து இன்று மாலை 4 மணி வரை மும்பை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.விமான ஓடுதளத்தில் மழை வெள்ளம் தேங்கிக் கிடப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மும்பை விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் பெரும்பாலான விமானங்கள் அகமதாபாத்துக்கும், கோவாவுக்கும் திருப்பிவிடப்பட்டுள்ளன. நியூயார்க், நேவர்க், லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ ஆகிய இடங்களில் இருந்து வரவேண்டிய 4 ஏர் இந்தியவிமானங்கள் டெல்லிக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக ஏர்- இந்தியா அதிகாரி தெரிவித்தார்.

பலத்த மழை காரணமாக இன்று மகராஷ்டிர மாநிலத்திற்கு பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இன்றும் மழை பெய்து வருவதால் மழையால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனஅஞ்சப்படுகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட ராய்கட் பகுதியில் மீட்புப் பணிகளில் 5000 ராணுவத்தினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணியில் 5000 ராணுவத்தினர்:

இதற்கிடையே கனமழைக்கு இதுவரை 99 பேர் பலியாகியுள்ளதாக மகராஷ்டிர மாநில முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், கனமழைக்கு இதுவரை மாநிலத்தில் 99 பேர் பலியாகியுள்ளனர்.

ராய்கட்டில் 45 பேரும், மும்பையில் 22 பேரும், நேவி மும்பையில் 16 பேரும், ரத்னகிரியில் 6 பேரும், தானேவில் 8 பேரும், பீட்மாவட்டத்தில் 2 பேரும் மழைக்கு இறந்துள்ளனர்.

மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ராய்கட்டில் மீட்புப் பணிகளுக்கு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. மேலும் ராணுவம், விமானப் படை, கப்பற் படையைச் சேர்ந்த 5000 வீரர்கள் மீட்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மழை தொடர்ந்து பெய்து வருவதால் நாளையும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+