சங்கரராமன் : மேலும் 4 அரசு வக்கீல்கள் நியமனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சங்கரராமன் கொலை வழக்கில் மேலும் 4 மூத்த வழக்கறிஞர்கள் அரசுத் தரப்பில் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சங்கரராமன் கொலை வழக்கு தற்போது செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில்அரசுத் தரப்பில் பாலசுந்தரம், ஆறுமுகம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் கூடுதலாக மேலும் 4 அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கந்தசாமி, திலகர் பாலசுப்ரமணியம்,நடராஜன், ராமசாமி ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பான உத்தரவு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்திற்கும் இந்தத் தகவல்முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோர் ஆஜராகவில்லை. இதனால்குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை. ஆகஸ்ட் 16ம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அன்றும் இரு சங்கராச்சாரியார்களும் வராவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் எனத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+