சொத்துக் குவிப்பு: ஆகஸ்ட் 2ம் தேதி ஜெயலலிதா ஆஜராக நீதிபதி உத்தரவு
பெங்களூர்:
சொத்துக் குவிப்பு வழக்கில் ஆகஸ்ட் 2ம் தேதி முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்என்று நீதிபதி பச்சாப்பூரே இன்று உத்தரவிட்டார்.
இந் நிலையில் கடந்த வாரம் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இளவரசி, தன்னை வழக்கிலிருந்து விடுவிக்க கோரி மனுதாக்கல் செய்தார். இதற்கு அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து தினகரனும் தன்னை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்தார். இதற்கு ஆட்சேபனை தெரிவித்துஅரசு வழக்கறிஞர் ஆச்சார்யா மனு தாக்கல் செய்தார்.
அவரது மனுவில் மக்கள் பிரநிதிகள் மீது ஊழல் வழக்கு தொடரும் போது, ஊழல் தடுப்பு சட்டம் 19வது பிரிவின் கீழ் அனுமதிபெற வேண்டும் என்பது உண்மை. ஆனால், 1991 முதல் 96 வரை தினகரன் மக்கள் பிரதிநிதி கிடையாது.
இப்போது அவர் ராஜ்யசபா எம்.பி.யாக இருக்கிறார். இதனால், 1991, 96ம் ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகுவித்ததற்காக தினகரன் மீது வழக்கு பதிவு செய்யும் போது, 19வது பிரிவின் கீழ் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லைஎன்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து தினகரனின் வழக்கறிஞர் குமார் வாதிடுகையில், அரசு தரப்பால் தாக்கல் செய்யப்பட்ட புதிய குற்றப்பத்திரிகைசரியாக இல்லை. சொத்துக் குவிப்பு மற்றும் லண்டன் ஹோட்டல் வழக்கின் இரு குற்றப்பத்திரிகையையும் ஆய்வு செய்துமுழுமையான திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், அரசுத் தரப்பு தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை முழுமையானதாக இல்லை. புதிய குற்றப்பத்திரிகையில் தினகரன்மீது குற்றச்சாட்டுகள் கூறப்படவில்லை. சொத்து குவிப்பு வழக்கில் 5வது எதிரியாக நீதிமன்றத்தால் சேர்க்கப்பட்டிருக்கும்தினகரனை, நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.
சொத்து குவிப்பு வழக்குக்கும் தினகரனுக்கும் சம்பந்தம் இல்லை. இதனால், தினகரனை சொத்து குவிப்பு வழக்கில் இருந்துவிடுவிக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதி பச்சாப்பூரே இன்றைக்கு ஒத்தி வைத்தார். இன்று ஜெயலலிதா சார்பில் ஆஜரானவழக்கறிஞர் விசாரணையை ஒத்தி வைக்க கோரினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி பச்சாப்பூரே, முதல்வர் ஜெயலலிதா உட்பட 5 பேரும் தொடர்ந்து வழக்கு விசாரணையைபுறக்கணித்து வருகின்றனர். தினகரன், ஜெயலலிதா மீதான 2வது குற்றச்சாட்டு பதிவு
மற்றும் வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி தினகரன், இளவரசி ஆகியோர் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஆகஸ்ட் 2ம்தேதிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தார். அன்றைய தினம் ஜெயலலிதா, சசிகலா, தினகரன் உட்பட 5 பேரும் கண்டிப்பாகஆஜராக வேண்டும் என்று நீதிபதி பச்சாப்பூரே உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications