காவிரி பிரச்சினையில் அரசியல் வேண்டாம்: தேவ கெளடா
சென்னை:
காவிரி பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் என்று சென்னையில் நடந்த ஒரு பள்ளி விழாவில் முன்னாள் பிரதமர் தேவகெளடா கூறினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், இந்தியாவில் கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள குழப்பங்களை நிவர்த்தி செய்ய தேசியஅளவிலான கல்விக் கொள்கையை மத்திய அரசு உருவாக்க வேண்டும். தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தவேண்டும்.
மாநிலத்துக்கு மாநிலம் கல்விக் கொள்கையில் மாறுபாடு இருக்கிறது.கிராமப்புறங்களில் ஆரம்பக் கல்வியும், நடுநிலைக்கல்வியும் மோசமாக இருக்கிறது. இதனால் கிராமப்புற மாணவர்களுக்கும், நகர்ப்புற மாணவர்களுக்கும் இடையே சமமானநிலை இல்லை. இது சமூகத்திற்கு நல்லதல்ல என்றார்.
இதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், தரம் சிங்கின் கூட்டணி அரசில் என்னுடைய கட்சியும் உள்ளது. கர்நாடகஅணைகளில் நீர் இருப்பு குறித்து இப்போது ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்த நேரத்தில் எந்த பிரச்சினையும் தேவையில்லை. கபினி அணையிலிருந்து கடந்த 10 நாட்களுக்கு முன் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதற்கு மேலும் அங்கு தண்ணீரை சேமித்து வைக்க முடியாது.
காவிரி விவகாரம் இரண்டு மாநில விவசாயிகளுக்கு இடையேயான வாழ்வா சாவா பிரச்சினை. இதை அரசியலாக்கவிரும்பவில்லை. இது விவசாயிகளின் உணர்வுபூர்வமான பிரச்சினையாக இருப்பதால் ஆவேசத்தை உருவாக்கக் கூடாதுஎன்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications