தலைமைச் செயலகம் அருகே தற்கொலைக்கு முயன்ற நடிகர்
சென்னை:
சென்னை தலைமைச் செயலகம் அருகே நாடக நடிகர் ஒருவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்ய முயன்றார்.
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள முதலமைச்சர் குறை தீர்ப்புப் பிரிவில் நாள்தோறும் ஏராளமானபொதுமக்கள் மனு கொடுத்து வருகிறார்கள். இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாத அல்லது தங்களது பிரச்சினையைமுதல்வரின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்பும் சிலர் அவ்வப்போது தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது வழக்கம்.சில மாதங்களுக்கு முன்பு வரை இதுபோன்ற தற்கொலை முயற்சிகள் அடிக்கடி நடந்து வந்தன. பின்னர் தீவிர போலீஸ்கண்காணிப்பு மற்றும் மன நல ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த சம்பவங்கள் குறைந்து விட்டன.
இந் நிலையில் இன்று திருத்தணியைச் சேர்ந்த நாடக நடிகர் ஒருவர் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றார்.
திருத்தணி அருகே உள்ள திருவாலங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவர் ஒரு நாடக நடிகர். தெருக்கூத்துக் கலையில்தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இதில் போதுமான வருமானம் இல்லாததால், குடும்பம் நடத்த முடியாமல் வறுமையில்கஷ்டப்பட்ட வந்தார். இதன் காரணமாக மனைவி, குழந்தைகள் சுப்ரமணியை விட்டுப் பிரிந்து சென்று விட்டனர்.
இதனால் மனம் நொந்து போயிருந்தார் சுப்ரமணி. அத்தோடு வாங்கி வைத்திருந்த ஏகப்பட்ட கடன் தொகையும் அவரைமிரட்டியது. தனது எழுத்துத் திறமையால் சினிமாவில் கதை, வசனம் எழுதி பிழைக்கலாம் என்று சென்னை வந்து பல்வேறுதிரைப்பட நிறுவனங்களை அணுகினார். ஆனால் அங்கும் பலன் கிடைக்கவில்லை.
இதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தனது நிலையை விளக்கி உதவி கோர முடிவு செய்த சுப்ரமணி, முதல்வர்குறை தீர்ப்புப் பிரிவுக்கு வந்து முயற்சி செய்தார். முதல்வரை மாலை நேரத்தில் சந்திக்க முடியாது என்று அங்கிருந்தவர்கள்கூறி விட்டனர்.
இதனால் வெறுப்பின் உச்சிக்கே போய் விட்ட சுப்ரமணி, கையோடு கொண்டு வந்திருந்த பூச்சி மருந்தைக் குடித்து விட்டார்.வாயில் நுரை தள்ளியபடி மயங்கிக் கிடந்த சுப்ரமணியை போலீஸார் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்அபாய கட்டத்தைத் தாண்டி விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications