ஜட்டியுடன் கவுன்சிலர் போராட்டம்; பெண்கள் ஓட்டம்
சென்னை:
சென்னை அருகே ஆலந்தூர் நகராட்சி மன்றக் கூட்டத்தில் சட்டை, பனியன், பேன்ட்டைக் கழற்றி போராட்டத்தில்சுயேச்சை கவுன்சிலர் ஈடுபட முயன்றதால் அதிருப்தியுற்ற பெண் கவுன்சிலர்கள் அனைவரும் கூட்டத்திலிருந்துவெளியேறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆலந்தூர் நகராட்சி மன்றக் கூட்டம் நகராட்சித் தலைவர் ஆர்.எஸ்.பாரதி (திமுக) தலைமையில் நடந்தது. கூட்டம்தொடங்கியதும், பாதாள சாக்கடைத் திட்டத்திற்கு, மாத வாடகையை ரூ. 150லிருந்து ரூ. 105 ஆக தமிழக அரசுகுறைத்துள்ளது.இதைப் பாராட்டி தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று நகராட்சி துணைத் தலைவர் பக்தவச்சலம் (அதிமுக)கோரிக்கை விடுத்தார்.
இதற்கு நகராட்சித் தலைவர் மறுப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக தலைவருக்கும், துணைத் தலைவருக்கும்இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து திமுக கவுன்சிலர்கள் தலைவருக்கு ஆதரவாகவும்,அதிமுகவினர் துணைத் தலைவருக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பி கோஷம் போட்டனர்.
திமுக, அதிமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் அவைத் தலைவர் இருக்கை முன்பு கூடி மாறி மாறி கோஷம்போட்டதால் அங்கு கூச்சல் குழப்பம் நிலவியது.
இந்த நேரத்தில் சுயேச்சை கவுன்சிலரான குட்டி ராமதாஸ் என்பவர் திடீரென மேசை மீது ஏறி நின்று எனதுவார்டில் ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. அதைத் தீர்த்து வைப்பதில் யாருக்கும் அக்கறை கிடையாது. ஆனால்தேவையில்லாத பிரச்சினைக்காக இப்படி சப்தம் போட்டுக் கொண்டிருக்கிறீர்களே என்று ஆவேசமாக கேட்டபடிதனது சட்டை, பனியனை கழற்றி எறிந்தார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பேன்ட்டையும் அவர் கழற்றினார். இதையடுத்து அவையில்இருந்த பெண் கவுன்சிலர்கள் அங்கிருந்து ஓடினர்.
மற்ற கவுன்சிலர்கள் உடனடியாக ஓடி வந்து ராமதாஸ் பேன்ட்டை முழுமையாக கழற்ற விடாமல் தடுத்து அவரைசமாதானப்படுத்தினர். அவரது பேன்டை மாட்டி விட்டனர்.
சுயேச்சை கவுன்சிலரின் இந்த அருவறுப்பான செயலால் பெண் கவுன்சிலர்கள் தாங்கள் மிகுந்த மனவேதனையுற்றதாக தெரிவித்தனர். இதுபோன்ற அசிங்கமான செயல்களில் ஈடுபடுவோர் மீது அரசு கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications