தொகுதி சீரமைப்பு: டெல்லியில் இன்று இறுதிக் கட்ட ஆலோசனை
டெல்லி:
தமிழகத்தில் சட்டசபை மற்றும் மக்களவைத் தொகுதிகள் சீரமைப்பு தொடர்பாக டெல்லியில் இன்று இறுதிக் கட்ட ஆலோசனைநடந்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகள் மற்றும் 39 மக்களவைத் தொகுதிகளை மக்கள் தொகை அடிப்படையில்சமமாகப் பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தத் தொகுதிகள் பல ரத்து செய்யப்படுகின்றன, புதிதாகசில தொகுதிகள் உருவாக்கப்படுகின்றன. சில மாவட்டங்களில் தொகுதிகள் கூடுகின்றன, சிலவற்றில் தொகுதிகள் குறைகின்றன.இதுதொடர்பாக ஏற்கனவே பல்வேறு கட்டங்களாக அரசியல் கட்சிகளிடமிருந்து ஆலோசனை பெறப்பட்டுள்ளது. கடந்த 19ம்தேதி டெல்லியில் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனைை நடத்தியது.
அப்போது தொகுதி சீரமைப்பு தொடர்பாக இன்னும் விளக்கம் அளிக்க அவகாசம் தேவை என்று உறுப்பினர்கள்கோரியிருந்தனர். இதையடுத்து 30ம் தேதி இறுதிக் கட்ட ஆலோசனை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று காலை தேர்தல் ஆணையத்தில் இறுதிக் கட்ட ஆலோசனை தொடங்கியது. புதிதாக அமைக்கப்படவுள்ளதொகுதிகள் குறித்தும், ரத்தாகும் தொகுதிகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
பத்மநாபபுரம், நாட்ராம்பள்ளி உள்ளிட்ட சில தொகுதிகளை ரத்து செய்யக் கூடாது என்று பல்வேறு கட்சிகள் கருத்துதெரிவித்துள்ளன.
தொகுதி சீரமைப்பு குழு தலைவர் குல்தீப் சிங் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிநரேஷ் குப்தா, தேர்தல் ஆணையர் பழனிச்சாமி ஆகியோரும், 10 தமிழக எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
அதிமுக சார்பில் டாக்டர் விஜயபாஸ்கர், சிவசாமி, தமிழ்மொழி ராஜதத்தன், திமுக சார்பில் பொன்முடி, சுகவனம், கிருஷ்ணசாமி,காங்கிரஸ் சார்பில் தங்கபாலு, போளூர் வரதன், பாமக சார்பில் தன்ராஜ், மதிமுக சார்பில் பொள்ளாச்சி கிருஷ்ணன் ஆகியோர்கலந்து கொண்டுள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications