"கும்பகோணம்: 1,200 நர்சரி பள்ளிகளுக்கு மீண்டும் அனுமதி
சென்னை:
முறையான அங்கீகாரம் பெறாமல் இயங்கி வந்து, பின்னர் அரசால் மூடப்பட்ட 1200 நர்சரிப் பள்ளிகளுக்கு தமிழக அரசுஅங்கீகாரம் வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு கும்பகோணம் பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 94 குழந்தைகள் இறந்த சம்பவத்தைத் தொடர்ந்துஅடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத பள்ளிக் கூடங்களை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.இந்த வசதிகள் இல்லாதவர்கள், முறையான அங்கீகாரம் இல்லாமல் பள்ளியை நடத்துபவர்களுக்கு அரசு காலக்கெடு விதித்து,அதற்குள் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
மொத்தம் 40 விதிமுறைகளை அரசு விதித்துள்ளது. இவற்றை பூர்த்தி செய்யாத சுமார் 3000 நர்சரி மற்றும் மெட்ரிகுலேஷன்பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து இப்பள்ளிகளின் நிர்வாகிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்து விட்டது. அதேசமயம்,அங்கீகாரம் பெறாத பள்ளிகள் அங்கீகாரம் கோரி அரசிடம் விண்ணப்பிக்கலாம் என்றும் அவற்றை அரசு பரிசீலிக்க வேண்டும்என்றும் உத்தரவிட்டது.
இதையடுத்து அங்கீகாரம் கோரி 3180 பள்ளிகள் விண்ணப்பித்தன. இந்த விண்ணப்பங்கள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டுவருகிறது. இதில் இதுவரை 1200 பள்ளிகளின் விண்ணப்பங்கள் திருப்திகரமான வகையில் இருந்ததால் அந்தப் பள்ளிகளுக்குஅங்கீகாரம் வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும் இன்னும் 40 சதவீத பள்ளிகள் முறையான அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருவதாக அரசு வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பள்ளிகள் முறையான அனுமதி இல்லாமல் செயல்படுவதாகவும் அரசுத் தரப்பில்கூறப்படுகிறது.
இந்தப் பள்ளிகள் முறையான அங்கீகாரம் பெறாமல் தொடர்ந்து இயங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கவும் கல்வித்துறைமுடிவு செய்துள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications