சங்கர மட பல்கலைக்கழக பொறியியல் படிப்புக்கு அங்கீகாரம் ரத்து!
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் சங்கர மடத்திற்குச் சொந்தமான சந்திரசேகரேந்திர சரஸ்வதி நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தில்,பொறியியயல்படிப்புக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் சங்கர மடத்திற்குச் சொந்தமான சந்திரசேகரேந்திர சரஸ்வதி நிகர் நிலைப் பல்கலைக்கழகம்உள்ளது.இங்கு பொறியியல் படிப்புக்கான அங்கீகாரத்தை அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் ரத்து செய்து விட்டதாக 2நாட்களுக்கு முன்பு செய்தி பரவியது. இதனால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. பல்கலைக்கழக வளாகத்தில்மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் மாணவர்களை பல்கலைக்கழக நிர்வாகம் சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தது. இருப்பினும் பொறியியல்படிப்புகளுக்கான அங்கீகாரத்தை அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் ரத்து செய்துள்ளது உண்மை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் பாஸ்கரன் கூறுகையில், நாங்கள் நிகர் நிலைப் பல்கலைக்கழகம். எனவே அகில இந்தியதொழில்நுட்பக் கவுன்சிலின் முடிவுகளுக்குக் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை. இதை சட்டப்படியாக சந்திப்போம்என்றார்.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் சிக்கிய பிறகு படிப்படியாக பல்வேறு சிக்கல்களை சங்கர மடம் சந்தித்து வருகிறது.ஜெயேந்திரர் ராமேஸ்வரம் கோவிலுக்கு சமீபத்தில் சென்றபோது கோவில் கருவறைக்குள் அவர் அனுமதிக்கப்படவில்லை.மேலும் சங்கர மடம் சார்பில் கோவிலுக்கு அளிக்கப்பட்ட நன்கொடையையும் கோவில் நிர்வாகம் நிராகரித்து விட்டது.
தற்போது சங்கர மடத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் படிப்புக்கான அங்கீகாரம்ரத்து செய்யப்பட்டுள்ளது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications