பெண்களை இழிவுபடுத்தும் டாஸ்மாக் அதிகாரிகள்: பாமக கண்டனம்
சென்னை:
சென்னையில் பிரபல வணிக வளாகமான ஸ்பென்சர் பிளாசாவில் திறக்கப்பட்டுள்ள அரசு மதுக் கடையில் ஏராளமானபெண்களும் மது வாங்கி செல்வதாக தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் கூறியிருப்பது கடுமையாககண்டிக்கத்தக்கது.
டாஸ்மாக் அதிகாரிகள் பெண் குலத்தையே இழிவுபடுத்தி விட்டனர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தெருக்கள் தோறும் மதுக்கடைகள்திறக்கப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சிக்கு வந்தபோது 5000 மதுக் கடைகள் இருந்தன. தற்போது இது மூன்று மடங்கு அதிகரித்துவிட்டது.
இந் நிலையில், சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் உட்கார்ந்து, குடிக்கும் வசதியுடன் (பார்) கூடிய அரசு மதுக் கடைதிறக்கப்பட்டுள்ளது. குழந்தைகளும், பெண்களும், வயது முதிர்ந்தவர்களும் அதிகம் வந்து போகும் அந்த இடத்தில்டாஸ்மாக் மதுக் கடை திறக்கப்பட்டிருப்பது விதிகளுக்குப் புறம்பானது.
இதுதொடர்பாக ஒரு பத்திரிக்கையில் செய்தி வெளியாகியிருக்கிறது. அந்தப் பத்திரிக்கை சார்பில் டாஸ்மாக் நிறுவனஅதிகாரிகளிடம் கேட்டபோது, பொதுமக்கள் இந்தக் கடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சொல்லப்போனால் பெண்களும்இங்கு வந்து மது வாங்கிச் செல்வதாக கூறியிருக்கிறார்கள்.
அந்த அதிகாரிகள் இவ்வாறு கூறியிருப்பது உண்மையானால் அது பெண் குலத்தையே இழிவுபடுத்துவதாகும்.
ஒரு பெண், மாநில முதல்வராக இருக்கும் நிலையில், பொது இடத்தில் உள்ள மதுக் கடைகளுக்கு பெண்கள் வந்து மதுவைவாங்கிச் செல்வதாக கூறியிருப்பது அந்த பெண் முதல்வருக்கும், அவரது ஆட்சிக்கும் சிறப்பல்ல. இதை சாதனை என்று கூறமுடியாது, வேதனையான செய்தி.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அரசு இதுகுறித்து விளக்கம் கேட்க வேண்டும். ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்காவிட்டால்,பாமக மகளிர் அணி சார்பில் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவர் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications