அதிமுகவுடன் கூட்டணியா? வாசன் விளக்கம்
சென்னை:
அதிமுக தனி மரமாக நிற்கிறது. எனவே அக்கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கே இடமில்லை என்றுதமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கூட்டணி குறித்து திறந்த மனதோடு இருப்பதாக ஜெயலலிதாகூறியிருப்பது குறித்து கவலைப்படத் தேவையில்லை. அதிமுக தனி மரமாகி விட்டது. எனவே எந்த சந்தேகமும் தேவையில்லை.ஐனநாயக முற்போக்குக் கூட்டணி மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. வருகிற சட்டசபைத் தேர்தலிலும் இந்தக்கூட்டணி தொடரும்.ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரியாதைக்குரிய மத்திய அமைச்சர். காங்கிரஸ் கட்சி செயலிழந்து விட்டது அவர் கூறியிருப்பதுஅவரது சொந்தக் கருத்து. என்னைப் பொருத்தவரை அனைவரும் ஒரே அணியாக செயல்பட்டு காங்கிரஸை முதல் இயக்கமாககொண்டு வர வேண்டும் என்பதே எனது எண்ணம்.
சத்தியமூர்த்தி பவனில் வன்முறைக்கு இடமில்லை. வன்முறைச் செயலில் ஈடுபட்ட 4 பேர் சஸ்பெண்ட் ஆகியுள்ளனர். காமராஜர்இருந்த இடம் இது. இங்கு வன்முறையில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
காமராஜர் ஆட்சி வர வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புகிறார்கள். காலம் கனியும்போது அந்த நிலை உருவாகும்.
வருகிற சட்டசபைத் தேர்தலில் அதிமுகவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே எங்களது எண்ணம். அது தான் கட்சியின்கோட்பாடும் கூட. எனவே அந்த கோட்பாட்டைத் தாண்டி யாராவது செயல்பட்டால் கட்சித் தலைமை சும்மா இருக்காது, அதைஅனுமதிக்காது. கட்சிக்குள் குந்தகம் விளைவிக்க முயலும் எதிர்க்கட்சி நண்பர்கள் தோல்வி அடைவார்கள்.
காவிரிப் பிரச்சினையில் அதிமுக நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் கண் துடைப்புப் போராட்டமாகும் என்றார் வாசன்.
பின்னர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ. விநாயகமூர்த்தியை வாசன் சந்தித்துஉடல் நலம் விசாரித்தார். அப்போது தமிழருவி மணியன் பாரமலை ஆகியோர் உடனிருந்தனர். சர்ச்சையில் சிக்கியுள்ளவிநாயகமூர்த்தியை, வாசன் சந்தித்துப் பேசியது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications