திமுக ஆட்சியில் 106 பாலங்கள் கட்டியதில் ஊழல்? லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் 106 பாலங்கள் கட்டப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதாக கூறி அதை விசாரிக்கும்பணியில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் ஏராளமான பாலங்கள் கட்டப்பட்டன. இந்தப் பாலங்கள் கட்டப்பட்டதில்முறைகேடுகள் நடந்திருப்பதாக அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் குற்றம் சாட்டப்பட்டது.

இதைத் தொடர்ந்து சென்னையில் பாலங்கள் கட்டப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதாக கூறி அப்போதைய சென்னை மேயர்மு.க.ஸ்டாலின் உட்பட சிலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

இதற்கிடையே சென்னை நேப்பியர் பால விரிவாக்கத்திலும் ஊழல் நடந்திருப்பதாக கூறி மு.க.ஸ்டாலினிடம் விசாரணை நடத்தலஞ்ச ஒழிப்பு போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

இந் நிலையில் கடந்த திமுக ஆட்சியில் காட்டாற்றின் குறுக்கே 106 பாலங்கள் கட்டப்பட்டதிலும் ஊழல் நடந்திருப்பதாக கூறிலஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+