தேர்தலை சந்திக்க திமுகவினர் தயாராக வேண்டும்: கருணாநிதி
சென்னை:
தமிழக சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரப்போகிறது. எனவே மக்கள் பிரச்சினைகளுக்காக போராடுங்கள்என்று திமுகவினரின் கலந்துரையாடல் கூட்டத்தில் கருணாநிதி கூறினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாவட்ட வாரியாக திமுகவினரின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்று வருகிறது.தூத்துக்குடி, சிவகங்கை, மற்றும் விருதுநகர் மாவட்ட கூட்டத்தில் கருணாநிதி பேசுகையில், இன்னும் சில மாதங்களில் தேர்தல்வரப்போகிறது.தேர்தல் நேரத்தில் நம்முடைய தோழர்கள் இன்னும் சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும். தேர்தல் விரைவில் வர இருப்பதால்தான் தேர்தலுக்கான ஆயத்தங்களை ஆளும் கட்சி செய்து கொண்டிருக்கிறது. ஜெயலலிதா சலுகைகளை வாரி வழங்கிவருகிறார்.
ஆளும் கட்சியின் நிலை சரியாக இல்லை என்று உளவுத் துறையினர் கூறியிருக்கின்றனர். அதனால் தான் மக்களை ஏமாற்றநாள்தோறும் சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன.
காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசு தண்ணீரை பெற்றுத் தரவில்லை என்று ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். இவர்கர்நாடகத்திற்கு சென்று முதலமைச்சரோடு பேசியிருக்க வேண்டும். தண்ணீரை கேட்டு பெற்றிருக்க வேண்டும்.
அதையெல்லாம் செய்யாமல் மத்திய அரசு மீது தேவையில்லாமல் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசில் திமுகஇணைந்திருப்பதால் அந்த கெட்டப் பெயர் நமக்கு வரட்டும் என்பதற்காக அந்த வேலையை செய்து கொண்டிருக்கிறார்.
ஜெயலலிதா சலுகைகளை அறிவிக்கலாம். ஏற்கனவே பறித்த சலுகைகளை மீண்டும் கொடுக்கலாம். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஊருக்கு ஊர் இருக்கும் பிரச்சினைகளை நாம் வெளிக்கொண்டு வரவேண்டும்.
ஜெயலலிதா வாரி வழங்கும் சலுகைகள் தேர்தலுக்கான தந்திரம் என்பதை திண்ணைப் பேச்சுக்களிலும், தெருக்கூட்டங்களிலும்சொன்னால் போதும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications