குன்னக்குடிக்கு கர்நாடக இசைஞானி பட்டம்: ஜெ. வழங்கினார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Violonist Kunnakkudi Vaidyanadhan receiving award from CM Jayalalitha

வயலின் கலைஞர் குன்னக்குடி வைத்யநாதனுக்கு கர்நாடக இசைஞானி என்ற பட்டத்தை முதல்வர் ஜெயலலிதாசென்னையில் நடந்த விழாவில் வழங்கினார்.

வயலின் வாசிக்கத் தொடங்கி 60 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி குன்னக்குடி வைத்யநாதனுக்கு, சென்னை நாரதகானசபாவில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவுக்கு முதல்வர் ஜெயலலிதா தலைமை தாங்கி கர்நாடக இசை ஞானிஎன்ற பட்டத்தை குன்னக்குடிக்கு வழங்கினார்.

குன்னக்குடி சங்கீத குருகுலம் சார்பில் குன்னக்குடிக்கு, தங்கம் மற்றும் வைரம் பதிக்கப்பட்ட வைர வயலினும் பரிசாகவழங்கப்பட்டது. அதையும் ஜெயலலிதா வழங்கினார்.

பின்னர் ஜெயலலிதா பேசுகையில், இன்று வயலினுக்கு மணி விழா. அதுவும் வைர விழா, வைர வயலின் குன்னக்குடிக்குவழங்கப்பட்ட காரணத்தால். இசையால் தாவரங்கள் வளரும் என்பார்கள். அது அறிவியல். இசையால் நோய்களைக்குணப்படுத்தலாம் என்கின்றன நமது சாத்திரங்கள்.

உடல் நலம் இல்லாமல் கோமாவில் இருந்த தந்தை முன் பைரவி ராகத்தை பல மணி நேரம் வாசித்தார் அந்த பதினான்கு வயதுமகன். தந்தை குணமடைந்தார் என்பது மட்டும் அல்ல, அதற்குப் பிறகு பல ஆண்டுகள் நலமுடன் உயிர் வாழ்ந்தார்.

அவ்வாறு தனது இசையால் தந்தையின் நோயைக் குணப்படுத்திய மகன் யார் தெரியுமா? அவர் தான் நமது குன்னக்குடிஅவர்கள். இதில் ஆச்சரியம் இல்லை, அவரது பெயரே வைத்தியநாதன் அல்லவா!

குன்னக்குடி எனக்கு வாய்ப்பாட்டு கற்றுத் தந்த குரு. குன்னக்குடி இசை அமைத்து அம்மன் மீது நான் பாடி கொலம்பியாநிறுவனம் வெளியிட்ட 4 பக்திப் பாடல்கள், திருவேற்காடு அருள்மிகு கருமாரியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமை போன்றசிறப்பு தினங்களில் இன்றைக்கும் ஒலிபரப்பப்படுகின்றன என்பதை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கர்நாடக இசைஞானி:

தமிழிசையில் கண் மலர்ந்து, தரணியெல்லாம் புகழ் பரப்பும் கர்நாடக இசைக்குத் தன்னிகரற்ற பணியாற்றி வரும் குன்னக்குடிவைத்யநாதன் மீது தமிழக மக்கள் கொண்டுள்ள பேரன்பை வெளிப்படுத்தும் வகையிலும்,

தமிழக அரசு கொண்டுள்ள பெரும் மரியாதையை புலப்படுத்தும் வகையிலும் தமிழக அரசு சார்பில் கர்நாடக இசை ஞானிஎன்னும் பட்டத்தை வழங்கிக் கவுரவிப்பதில் நான்மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வளவு சிறப்புகள் அமையப் பெற்ற குன்னக்குடி, கர்நாடக இசையில் சாதனைச் சரித்திரம் படைத்து வருவதோடு, கர்நாடகஇசையின் பாரம்பரிய சிறப்பை உலகுக்கு உணர்த்தும் வகையில், ராக ஆராய்ச்சி மையம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இதன் மூலம் பல்வேறு ராகங்களின் மருத்துவ குணங்களையும், அவற்றின் மாபெரும் சக்திகளையும் பற்றி ஆராய்ச்சிமேற்கொள்ளப்பட்டு வருவதோடு, இதுதொடர்பான கருத்தரங்கம், ஆய்வரங்கம் முதலியன நடத்தப்பட்டு ராகங்களின்சிறப்பை மக்களுக்கு எடுத்துரைக்கும் பணியையும் அவர் செய்து வருகிறார்.

இந்த ஆராய்ச்சி மையம் சிறப்புடன் திகழ்ந்திட அதற்கென சொந்த இடம் வழங்கிட தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. சென்னைகுமாரசாமி ராஜா சாலையில், இசைக் கல்லூரிக்கு அருகில் 2 கிரவுண்டு இடம் வழங்கிட நான் ஆணையிட்டுள்ளேன் என்றார்ஜெயலலிதா.

நிகழ்ச்சியில் பின்னணிப் பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+