சென்னையில் கோடீஸ்வரப் பெண்மணி படுகொலை
சென்னை:
சென்னை அருகே திருவொற்றியூரில் கோடீஸ்வரப் பெண்மணி படுகொலை செய்யப்பட்டார்.
திருவொற்றியூர் அஞ்சுகம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராணி. 50 வயதாகும் ராணியின் கணவர் பெயர் சக்தி. இவர்களுக்குஏராளமான சொத்துக்கள் உள்ளன. பல கோடி ரூபாய் அளவுக்கு பல வீடுகளும் உள்ளன.சக்தி சில ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். ராணி-சக்தி தம்பதியின் மகன் பாலாஜி. அவருக்கு திருமணமாகி 2குழந்தைகளும் உள்ளனர். ராணிக்கும், அவரது மருமகளுக்கும் ஒத்துப் போகாத காரணத்தால் பாலாஜி தனது மனைவி,குழந்தைகளுடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார்.
இந் நிலையில் மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதால் பாலாஜி தனது தாய் வீட்டிற்கே வந்து குடும்பம்நடத்தி வந்தார். கடந்த சனிக்கிழமை பாலாஜி வெளியே சென்று விட்டார். அவரது மனைவி, குழந்தைகளுடன் அவரது தாய்வீட்டுக்குச் சென்றிருந்தார். ராணி மட்டும் வீட்டில் இருந்தார்.
இந் நிலையில் வெளியில் சென்றிருந்த பாலாஜி வீட்டுக்குத் திரும்பி வந்தார். அப்போது, வீடு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது.தாயார் தூங்குவதாக நினைத்த பாலாஜி காலையில் வரலாம் என்று நினைத்து திரும்பிச் சென்று விட்டார்.
காலையில் அவர் வீட்டுக்குத் திரும்பிய போதும் வீடு பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகம் அடைந்தார். ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது தாயார் ராணி ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்து அதிர்ந்தார். உடனடியாக போலீஸாருக்குத் தகவல்கொடுத்தார்.
போலீஸார் விரைந்து வந்து பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். ராணி சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது. சொத்துப் பிரச்சினை தொடர்பாக ராணி கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனபோலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications