தமிழைக் காக்க பழ. நெடுமாறன் அழைப்பு
நாகர்கோவில்:
![]() |
அடுத்த தலைமுறை தமிழர்கள், தமிழ் மொழி மீதான அன்பையும், நேசத்தையும் வளர்த்துக் கொள்ளாவிட்டால், தமிழ்மொழியும், கலாச்சாரமும் அழிந்து போவதைத் தவிர்க்க முடியாது என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன்கூறியுள்ளார்.
உலகத் தமிழர் பேரவையின் 3வது மாநாடு நாகர்கோவிலில் நடந்தது. இதில் ஏராளமான தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் பழ. நெடுமாறன் கலந்து கொண்டு பேசுகையில்,
20ம் நூற்றாண்டில் வாழ்ந்த எண்ணற்ற தமிழறிஞர்கள் தமிழ் கலாச்சாரத்தையும், தமிழ் மொழியையும் காக்கும் வகையில்பல்வேறு பங்களிப்பை அளித்து தமிழ் மொழிக்குஉதவியுள்ளனர்.
இதன் காரணமாக அவர்களுக்கு அடுத்த தலைமுறையினர் இன்னும் தமிழ் மொழி மீது பற்றுடனும், ஈர்ப்புடனும் இருக்கும் நிலைஏற்பட்டது. அதேபோல, அடுத்த தலைமுறைத் தமிழர்கள், தமிழர்களாகவும்,
தமிழ் மொழியை நேசிப்பவர்களாகவும், தமிழ் கலாச்சாரத்தைக் காப்பவர்களாகவும் இருக்க வேண்டுமானால், நமது காலத்தில்தமிழையும், தமிழ்க் கலாச்சாரத்தை பாதுகாக்கவும் வேண்டும்.
அடுத்த தலைமுறையினரிடம் தமிழ் மொழியின் தொன்மை, தமிழ்க் கலாச்சாரத்தின் சிறப்புகளை சொல்லிக் கொடுக்கவேண்டும். தமிழைக் காப்பவர்களாக அவர்களை மாற்ற பயிற்றுவிக்க வேண்டும் என்றார் நெடுமாறன்.
விடுதலைச் சிறுத்தை தலைவர் தொல் திருமாவளவன் பேசுகையில், தமிழின் பாதுகாவலன் என்று சொல்லிக் கொள்ளும் சிலஅரசியல் தலைவர்கள், உண்மையில் தமிழை மதிக்காதவர்களாகவே இருக்கிறார்கள்.இதன் காரணமாகவே தமிழ் மொழிக்கும், கலாச்சாரத்திற்கும் இழுக்கு ஏற்பட்டுள்ளது. அவர்களை தமிழர்கள் அடையாளம்கண்டு கொண்டு புறக்கணிக்க வேண்டும்.
ஆங்கிலத்தை எதிர்ப்பதற்காக தமிழ் பாதுகாப்பு இயக்கத்தை நாங்கள் தொடங்கவில்லை. மாறாக தமிழின் பெருமையைதமிழர்களிடம் எடுத்துக் கூறவும், தமிழ் மொழியை அவர்கள் மறந்து விடாமல் இருக்கும் வகையில் தான் இந்த இயக்கம்ஆரம்பிக்கப்பட்டது. தமிழர்களே தமிழைப் புறக்கணித்தால் வேறு யாராலும் தமிழைக் காக்க முடியாது.
மற்ற மொழிகளையும் கற்கட்டும். வேண்டாம் என்று சொல்லவில்லை. அப்படிக் கற்றால் தான் தமிழின் பெருமை அவர்களுக்குப்புரியும். அதேசமயம் தமிழை காவு கொடுத்து விட்டு மற்றமொழிகளுக்கு வெண் சாமரம் வீசுவதை ஏற்க முடியாது.
தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 17ம் தேதி மாபெரும் போராட்டத்தைநாங்கள் நடத்தவுள்ளோம். அதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறைசெல்லவும் தயாராக உள்ளோம்என்றார் திருமாவளவன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி













Click it and Unblock the Notifications