சொத்துக் குவிப்பு: பெங்களூர் நீதிமன்றத்தில் சசிகலா ஆஜர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் இன்று பெங்களூர் நீதிமன்றத்தில்ஆஜரானார்கள்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, தினகரன், எம்.பி., இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி ஜெயலலிதா, தினகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதைஎதிர்த்து ஆட்சேப மனு தாக்கல் செய்வதாக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்திருந்தார்.

இதன்படி நேற்று ஆச்சார்யாவின் ஜூனியர் வழக்கறிஞர் சந்தோஷ் ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில்,வழக்கை தாமதப்படுத்தும் நோக்கத்தோடு வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி ஜெயலலிதா, இளவரசி, தினகரன் ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

வழக்கு விசாரணை நடைபெற்று வரும் இந் நிலையில் வழக்கிலிருந்து விடுவிக்கக் கோருவது ஏற்புடையதல்ல.

மேலும் இந்த வழக்கில் ஜெயலலிதா பெயரை சேர்க்க ஊழல் தடுப்புச் சட்டம் 19வது பிரிவின்படி அனுமதி பெறவேண்டும் என்றுஎதிர்த் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் ஜெயலலிதா மீது வழக்கு பதிவு செய்யப்படும்போது அவர் மக்கள் பிரதிநிதியாகஇருக்கவில்லை.

எனவே அந்த அனுமதியை பெறவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந் நிலையில் இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது சசிகலா, சுதாகரன், இளவரசிஆகியோர் ஆஜரானார்கள். பாராளுமன்றக்கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் தினகரன் ஆஜராகவில்லை என்றுகூறப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+