தீவிரவாத முகாம்களை பாக். மூடாது: கூறுகிறார் அமெரிக்க நிபுணர்
சென்னை:
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத பயிற்சி முகாம்களை மூட அந்நாட்டுத் தலைவர்கள் யாரும் விரும்பவில்லை, மூடவும்மாட்டார்கள் என்று அமெரிக்க அமைதிக் கழகத்தின் தெற்காசியாவுக்கான திட்ட அதிகாரி கிறிஸ்டைன் ஃபேர் கூறியுள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் தீவிரவாதம் குறித்த கருத்தரங்கம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய ஃபேர்,பாகிஸ்தானில் ஏராளமான தீவிரவாத பயிற்சி முகாம்கள் உள்ளது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.இவற்றை மூட அந்நாட்டுத் தலைவர்கள் யாரும் விரும்பவில்லை. முகாம்களை மூடுமாறு அந்நாட்டுத் தலைவர்கள் யாரும்உத்தரவிட மாட்டார்கள்.
இந்த முகாம்களை மூலதனமாக வைத்துத் தான் காஷ்மீர் விஷயத்தில் இந்தியாவைப் பணிய வைக்க முடியும் என்றுஅந்நாட்டுத் தலைவர்கள் நம்புகிறார்கள். இதற்குக் காரணம், இந்தியா அனைத்து வகையிலும் பாகிஸ்தானை விட பல மடங்குமுன்னேறிய நிலையிலும், வலுவாகவும் இருப்பதால், தீவிரவாதத்தை வைத்தே தனது காரியத்தை சாதிக்க பாகிஸ்தான்நினைக்கிறது.
இந்தியாவில் மட்டும் தீவிரவாதத்தை பெரிய அளவில் நிகழ்த்துவது பாகிஸ்தான் தீவிரவாதிகளின் எண்ணம் அல்ல. ஈராக்கில்உள்ள அமெரிக்க அமைப்புகளையும் தாக்க அவர்கள் திட்டமிடுகிறார்கள்.
முன்பெல்லாம் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த நாடுகள், ஏழை நாடுகளில் தான் தீவிரவாதிகள் அதிகம் உருவாகினர்.ஆனால் இப்போது நிலைமை மாறி விட்டது. இப்போதைய தீவிரவாதிகள் நன்கு படித்தவர்கள், வசதியான குடும்பப்பின்னணியைக் கொண்டவர்களாக அவர்கள் உள்ளனர்.
தொழில்நுட்ப அறிவும் அவர்களிடம் அமோகமாக உள்ளது. இதன் காரணமாக அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு, சாதாரணஅமெரிக்கர்களை விட அதிக அளவு தொழில்நுட்ப அறிவு இருக்க வேண்டும் என்பதை அமெரிக்க அரசு உணர்ந்துள்ளதுஎன்றார் ஃபேர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications