493 சாயப்பட்டறைகளுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நவீன கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதாக உத்தரவாதம் கொடுத்ததை தொடர்ந்து 493 சாயப்பட்டறைகளைமீண்டும் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

திருப்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 700க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகளிலிருந்து வெளியாகும் சாயக் கழிவு நீர் நொய்யல்ஆற்றில் கலந்து, அந்த அசுத்த நீர் ஒரத்துப்பாளையம் அணையில் தேங்கி நிற்கிறது.

இந்த நீரை திறந்து விட்டால் வயல்கள் அனைத்தும் பாதிப்படையும் என்று கூறி விவசாயிகள் அணையைத் திறக்க எதிர்ப்புதெரிவித்து வருகின்றனர். அணையைத் திறக்காவிட்டால் அணை உடையும் அபாயம் இருப்பதால் இந்தப் பிரச்சினைஉயர்நீதிமன்றத்திற்கு வந்தது.

நொய்யல் ஆற்று ஆயக்கட்டுதாரர்கள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், திருப்பூர்சாயப்பட்டறைகளிலிருந்து வெளியாகும் கழிவு நீரை சுத்திகரிப்பது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்க கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் கற்பகவிநாயகம், நாகப்பன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது. கடந்த முறைவிசாரணை நடந்தபோது, சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதற்கான செலவில் 25 சதவீதம் தொகையை முன்பணமாககட்ட வேண்டும்,

சவ்வூடு பரவல் முறையில் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க வேண்டும், வங்கி உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றுஅவர்கள் உத்தரவிட்டிருந்தனர்.

ஆனால் உயர்நீதிமன்றம் கூறியபடி 571 சாயப்பட்டறைகள் நடந்து கொள்ளவில்லை. இதையடுத்து 571சாயப்பட்டறைகளையும் இழுத்து மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அவற்றுக்கான மின் இணைப்பையும் துண்டிக்கஉத்தரவிட்டது.

இதனால் திருப்பூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விஷயத்தில் தமிழக அரசு தலையிடக் கோரி திமுக உள்ளிட்ட கட்சிகள்சமீபத்தில் திருப்பூரில் முழு அடைப்புப் போராட்டத்தையும் நடத்தினர்.

இந் நிலையில், இவ்வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர்என்.ஆர்.சந்திரன் கூறுகையில், 571 பேரில் 493 சாயப்பட்டறை அதிபர்கள் 25 சதவீத முன்பணத்தைக் கட்டி விட்டனர்.குறிப்பிட்ட காலத்தில் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து விடுவோம் என்று உத்தரவாதம் அளித்துள்ளனர்.

ஒரத்துப்பாளையம் அணையிலிருந்து1:20 என்ற விகிதத்தில் கழிவு நீரை திறந்து விட்டு வருகிறோம். தற்போது காவிரியில்தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இன்னும் சில நாட்களில் அதிக அளவில் நீர் வரத்து இருக்கும்.

ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் ஓடும்போது, அணையில் உள்ள தண்ணீர் அனைத்தையும் திறந்து விட முடியும். இதனால்சுற்றுச்சூழல் பாதிப்பு ஏதும் ஏற்படாது என்றார்.

இதையடுத்து, முன்பணம் கட்டிய சாயப்பட்டறைகள் மீண்டும் இயங்க அனுமதிக்கலாம் என்று நீதிபதிகள் முடிவு செய்தனர்.இதற்கு என்.ஆர்.சந்திரனும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. பின்னர் மற்ற வழக்கறிஞர்களின் வாதங்களையும் கேட்ட பிறகு,நீதிபதிகள் தங்களது உத்தரவை வெளியிட்டனர்.

அதன்படி, 25 சதவீத முன்பணம் கட்டிய 493 சாயப்பட்டறைகள் மற்றும் சலவைப் பட்டறைகளை வழக்கம் போலஇயக்கலாம். இவற்றில் துண்டிக்கப்பட்டிருந்த மின் இணைப்பை உடனடியாக வழங்க வேண்டும்.

வழக்கறிஞர் மோகன் தலைமையிலான 3 பேர் குழு சாயப்பட்டறைகள், நீதிமன்ற உத்தரவை சரியாகப் பயன்படுத்துகிறார்களாஎன்பதை கண்காணித்து செப்டம்பர் 5ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

சாயப்பட்டறைகளிலிருந்து வெளியாகும் கழிவு நீர் குறித்து வருகிற 11ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியநீதிபதிகள் வழக்கு விசாரணையை செப்டம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+