நாளை மியான்தத்-தாவூத் மகன், மகள் திருமண வரவேற்பு
கராச்சி:
தாவூத் இப்ராகிமின் மகளை தனது மகனுக்கு மணமுடித்த பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவீத் மியான்தத், நாளைநடக்கவுள்ள தனது மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபுக்கும் அழைப்பிதழ்தந்துள்ளார்.
1993ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து தப்பியோடினார் தாவூத். இன்றும் தனதுகூலிப் படையினர் மூலம் பாலிவுட் நட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், மும்பை தொழிலதிபர்களிடம் பணம் பறித்து வருகிறார்.அவர் கராச்சியில் பாகிஸ்தான் ராணுவத்தின் பாதுகாப்புடன் வசித்து வருவதாக இந்திய புலனாய்வு அமைப்பான ரா கூறுகிறது.தாவூதை கைது செய்ய இன்டர்போல் சர்வதேச அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் அவர் தலைமறைவு வாழ்க்கையேவாழ்ந்து வருகிறார்
இந் நிலையில் சமீபத்தில் ஜாவீத் மியான்தத்தின் மகன் ஜுனைதுக்கும் தாவூதின் மகள் முஹ்ரக்குக்கும் துபாயில் நட்சத்திரஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. மிக பலத்த பாதுகாப்புடன் நடந்த அந்தத் திருமணத்துக்கு தாவூத் வந்தாரா இல்லையாஎன்று தெரியவில்லை.
திருமணத்துக்கு வந்தவர்களை ரா தீவிரமாகக் கண்காணித்தது.
இந் நிலையில் நாளை கராச்சியில் இந்தத் திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இந் நிகழ்ச்சியில் பங்கேற்க அதிபர்பர்வேஸ் முஷாரபுக்கும், பாகிஸ்தான் பிரதமர் செளகத் அஜீசுக்கும் அழைப்பிதழ் தந்துள்ளார் ஜாவித்.
ஆனால், செளதி மன்னர் பாதின் இறுதிச் சடங்கில் பங்கேற்க முஷாரப் ஜெட்டா சென்றுவிட்டதால் அவர் இந் நிகழ்ச்சியில் பங்கேற்கமாட்டார். ஆனால், பிரதமர் செளகத் அஜீஸ் இதில் பங்கேற்பாரா என்று தெரியவில்லை.
அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சிக்கு தாவூத் இப்ராகிம் வருவாரா என்று மியான்தத்திடம் கேட்டபோது, அவர் பதிலளிக்கமறுத்துவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications