தனுஷ்கோடி ஆதித்தன் ஜெயித்தது செல்லும்!
சென்னை:
திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தனுஷ்கோடி ஆதித்தன்வெற்றி பெற்றது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் தனுஷ்கோடி ஆதித்தன் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். அவரைஎதிர்த்து அதிமுக சார்பில் அமிர்த கணேசன் உள்ளிட்ட 13 பேர் போட்டியிட்டனர். இதில் தனுஷ்கோடி ஆதித்தன் வெற்றி பெற்றார்.அவரது வெற்றியை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்ட ராஜகோபாலன், வாக்காளர் ஆறுமுகம் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தனர்.
அவர்கள் தங்களது மனுவில், வேட்பு மனுவைத் தாக்கல் செய்யும்போதே சொத்து விவரங்கள் குறித்த அபிடவிட்டை தனுஷ்கோடிஆதித்தன் தாக்கல் செய்யவில்லை. 3 நாட்கள் கழித்தே அபிடவிட் தாக்கல் செய்தார். எனவே அவரது வெற்றி செல்லாது என்றுஅறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த மனு நீதிபதி சொக்கலிங்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின்னர் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிஉத்தரவிட்டார். அவர் தனது தீர்ப்பில், வேட்பு மனு தாக்கல் செய்யும்போதே சொத்து விவரங்கள் குறித்த அபிடவிட்டைதனுஷ்கோடி ஆதித்தன் தாக்கல் செய்திருக்காவிட்டாலும், வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய கடைசி நாளன்று அவர் தாக்கல்செய்துள்ளார்.
எனவே வேட்பு மனு ழுமை அடைந்து விட்டது. இந்தப் பிரச்சினை தொடர்பாக மனுதாரர்கள் தேர்தல் அதிகாரியையும்அணுகியுள்ளனர். அவரும் உரிய காரணத்தைக் கூறி அவர்களது கோரிக்கையை நிராகரித்து விட்டார். எனவே தனுஷ்கோடிஆதித்தன் வெற்றி முறையற்றது என்ற வாதம் ஏற்புக்குரியதல்ல என்று கூறி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications