கனடா: ரன்வேயில் மோதி வெடித்த ஏர்-பிரான்ஸ் விமானம்- 43 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
டொரான்டோ:
![]() |
கனடாவின் டொரான்டோ விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் பிரான்ஸ் விமானம் ரன் வேயில் இருந்து விலகி ஓடி, தரையில்மோதி வெடித்துச் சிதறியது. ஆனால், இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாரும் பலியாகவில்லை. 43 பயணிகள் சிறியகாயங்களுடன் தப்பிவிட்டனர்.
297 பயணிகளுடன் பாரிசில் இருந்து வந்த ஏர் பிரான்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ்-340 விமானம் டொரான்டோவின் பியர்சன்சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோது அங்கு கடும் மழை பெய்து கொண்டிருந்தது.
![]() |
தரையிறங்கிய விமானத்தை மின்னல் தாக்கியது. இதையடுத்து விமானம் கட்டுப்பாட்டை இழந்தது. மின்னல் தாக்கிய அடுத்தவினாடியே விமானம் ரன்வேயில் மிக பலமாக மோதியது.
இதையடுத்து தாவியபடி ரன்வேயில் இருந்து விலகி படு வேகத்தில் தரையில் ஓடியது. அப்போது விமானம் வெடித்துச் சிதறியது.சிதறிய விமானத்தில் தீப் பிடித்துக் கொண்டது.
ஆனால், விமானத்தின் உடைந்த பகுதிகள் வழியாக பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேறிவிட்டனர். இந்த விபத்தில் 43பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்














Click it and Unblock the Notifications