சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணையையே நிறுத்தக் கோருகிறார் ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

தன் மீதான வருமானத்துக்கு மீறிய சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணையை உடனடியாக நிறுத்துமாறு பெங்களூர் தனிநீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா, தினகரன், சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவித்த வழக்கு, லண்டனில்ஹோட்டல் வாங்கிய வழக்கு ஆகியவை நடந்து வருகின்றன. ஆனால், ஆரம்பத்தில் இருந்தே வழக்கை இழுத்தடிக்க பலவகைகளிலும் ஜெயலலிதா தரப்பு முயன்றது.

ஒரு வழியாக விசாரணை ஆரம்பமாகி நடந்து வருகிறது. ஆனாலும், நேரில் ஆஜராகாமல் இருந்து வருகிறார் ஜெயலலிதா.நீதிபதியின் கடும் எச்சரிக்கை காரணமாகவும், பிடிவாரண்ட் உத்தரவு காரணமாகவும் சசிகலாவும், இளவரசியும் நேற்றுஆஜராகினர்.

வழக்கம்போல் சுதாகரன் சினிமா ஹீரோ மாதிரி நீதிமன்றத்துக்கு வந்து போய்க் கொண்டிருக்கிறாரா. ஆனால், நாடாளுமன்றம்நடப்பதைக் காரணம் காட்டி தினகரன் வரவில்லை. அதே போல ஜெயலலிதாவும் நீதிமன்றத்துக்கு வரவில்லை.

வழக்குகளை இழுத்தடிக்கும் நோக்கில், முதலில் சொத்துக் குவிப்பு வழக்கையும், லண்டன் ஹோட்டல் வாங்கிய வழக்கையம்ஒன்றாக சேர்க்கக் கோரி மனு செய்தது ஜெயலலிதா தரப்பு. பின்னர் இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரிஇளவரசி, தினகரன், ஜெயலலிதா ஆகியோர் அடுத்தடுத்து மனுக்கள் போட்டனர்.

இந் நிலையில் இந்த வழக்கு விசாரணையையே உடனடியாக நிறுத்தக் கோரி ஜெயலலிதா இன்று பெங்களூர் நீதிமன்றத்தில்திடீரென ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பாக ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதி மனு தாக்கல் செய்து கூறுகையில்,

சொத்துக் குவிப்பு வழக்கும், லண்டனில் ஹோட்டல் வாங்கிய வழக்கும் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது. இதுவரை தனித்தனியாகவிசாரிக்கப்பட்ட இரு வழக்குகள் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் புதிய குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கவேண்டும். ஆனால், அதைச் செய்ய அரசுத் தரப்பு தவறிவிட்டது.

மேலும் இது புதிய வழக்காகிவிட்டதால், முதல்வரான ஜெயலலிதா மீது வழக்குத் தொடர மீண்டும் கவர்னரிடம் அனுமதிபெற்றிருக்க வேண்டும். அதுவும் செய்யப்படவில்லை என்றார் ஜோதி.

இதையடுத்துப் பேசிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆச்சாரியா, இவை பழைய வழக்குகள் தான்.

அவற்றை ஒன்றாக இணைத்ததற்காக மீண்டும் கவர்னரிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை என்றார்.

ஆனால் அதை ஏற்க மறுத்த ஜோதி, இதில் ஜெயலலிதா மீதான வழக்குகளை அப்டேட் செய்யாதவரை இந்த விசாரணையைதொடர்ந்து நடந்த முடியாது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் 19வது பிரிவின்படி ஜெயலலிதா மீது புதிய குற்றப் பத்திரிக்கை தாக்கல்செய்ய மீண்டும் கவர்னரின் அனுமதியை அரசுத் தரப்பு பெற வேண்டும்.

ஜெயலலிதா மீது வழக்குப் பதிவு செய்ய 2001ம் ஆண்டில் கவர்னரிடம் பெறப்பட்ட அனுமதியே தவறானது. அதுசெல்லுபடியாகாது. ஜே.எம்.எம். வழக்கில் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட போது உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பின் அடிப்படையில் பார்த்தால் எம்.பி அல்லது எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு செய்ய சபாநாயகரிடம்தான் அனுமதி பெற வேண்டும். கவர்னரிடம் அல்ல.

லண்டனில் ஹோட்டல் வாங்கியதில் மோசடி நடந்ததற்கு முகாந்திரம் இருப்பதாகக் கூறி அந்த வழக்கை தனி நீதிமன்றம்விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. ஆனால், அதற்கு முறையான அனுமதி பெறப்படவில்லை. இப்போது சொத்துக் குவிப்புவழக்கோடு லண்டன் வழக்கும் சேர்க்கப்பட்டுள்ளதால் சொத்துக் குவிப்பு வழக்குக்கு வாங்கப்பட்ட அனுமதி இந்த வழக்குக்குசெல்லாது என்றார் ஜோதி.

அப்போது பேசிய வழக்கறிஞர் ஆச்சாரியா, இந்த வழக்கு விசாரணையை இழுத்தடிக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்தவழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி இளவரசி, தினகரன், ஜெயலலிதா ஆகியோர் தனித்தனியாக மனுக்கள் தாக்கல்செய்து கொண்டிருக்கின்றனர்.

இந்த வழக்கில் ஜெயலலிதா மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது 1997ம் ஆண்டில். அப்போது அவர் எம்.எல்.ஏவோஎம்.பியோ கிடையாது. இதனால், அவர் மீது வழக்குப் பதிவு செய்ய சபாநாயகரின் அனுமதி தேவையே இல்லை.

இதனால் அவரை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டியது இல்லை. இரு வழக்குகளும் ஒன்றாக சேர்க்கப்பட்டதால், ஜெயலலிதாமீதும் தினகரன் மீதும் கூடுதலாக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்.

ஜெயலிலதா மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக ஆளுநரிடம் முன்பு பெறப்பட்ட அனுமதி முறையானது, அது முழுக்க முழுக்கசெல்லுபடியாகும். காரணம், முதல்வரை நியமிப்பதும் அவரை நீக்குவதும் கவர்னர் தான்.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணையை முடியப் போகும் நிலையில், இப்போது சபாநாயகரிடம் புதிதாகஅனுமதி பெற வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர் கோருவதற்கு எந்த அடிப்படையும் இல்லை.

வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி ஜெயலலிதா, இளவரசி, தினகரன் ஆகியோர் மனு செய்துள்ளது கூட சட்டப்பிரிவுகளை தவறாகப் புரிந்து கொண்டதன் அடிப்படையிலும், தவறான கோரிக்கைகளின் அடிப்படையிலும் தான்.

இதனால் அந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும். ஜெயலலிதா, தினகன் ஆகியோர் மீது புதிதாக மேலும் குற்றச்சாட்டுகள்பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றார் ஆச்சாரியா.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பச்சேபுரே, வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி ஜெயலலிதா, இளவரசி,தினகரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பை வரும் 10ம் தேதி அளிப்பதாக அறிவித்தார்.

அதே போல ஜெயலலிதா, தினகரன் மீது கூடுதல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய அனுமதி கோரும் அரசுத் தரப்பு மனு மீதும் அன்றேதீர்ப்பளிப்பதாக அறிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+