மக்களைத் தேடி செல்ல வேண்டும்; தொண்டர்களுக்கு கருணாநிதி உத்தரவு!
சென்னை:
சட்டசபைத் தேர்தல் விரைவில் வரும் நிலை உள்ளதால், தெருமுனைக் கூட்டங்கள், தலைவர்களின் பேச்சுக்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை மக்களிடம் விநியோகித்தல் என தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுமாறு திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர்கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு திமுகவினரைத் தயார்படுத்தும் விதமாக அண்ணா அறிவாலயத்தில் மாவட்ட வாரியாக திமுகநிர்வாகிகளுடன் கருணாநிதி கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.இந்த கலந்துரையாடலின் போது மாவட்ட நிர்வாகிகளுக்கிடையே நிலவும் பூசல்கள் தீர்க்கப்பட்டு, தேர்தலை மட்டும் மனதில்வைத்து செயல்படுமாறு கருணாநிதி அறிவுரை கூறி வருகிறார்.
ஈரோடு மாவட்ட திமுகவினரிடையே நடந்த கலந்துரையாடலின் போது கருணாநிதி பேசுகையில், நமது முக்கிய நோக்கம் தமிழ்இயக்கத்தை வளர்க்க வேண்டும் என்பது தான். அண்ணா தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்த காரணத்தால் தான் தமிழ்நாடுஎன்று பெயர் மாற்ற முடிந்தது.
இந்தி ஆதிக்கத்திற்கு இங்கு இடமில்லை என்று கூற முடிந்தது. சுயமரியாதைத் திருமணங்களை சட்டப்பூர்வமாக்க முடிந்தது.எனவே ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் நமது முதல் மற்றும் முக்கிய நோக்கம் தமிழ் இயக்கத்தைவளர்க்க வேண்டும் என்பது தான்.
சட்டசபைத் தேர்தல் விரைவில் வரவுள்ளது. எனவே திமுகவினர் அதற்குத் தயாராக வேண்டும். ஊர்தோறும் தெருமுனைக்கூட்டங்களை திமுகவினர் நடத்த வேண்டும். பெரிய அளவில் பொதுக் கூட்டம் போடுவதை விட 10 தெருமுனைக் கூட்டங்களைநடத்துவதால் அதிக பலன் உண்டு.
மக்களை நம்மைத் தேடி வர வைக்கக் கூடாது. நாமே மக்களைத் தேடிச் செல்ல வேண்டும். அது தான் தெருமுனைக் கூட்டத்தின்சிறப்பு. மக்களைத் தேடிச் சென்று நமது கருத்துக்களைப் பரப்ப வேண்டும்.
தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அந்த அம்மா ஏமாற்று வேலைகளில் இறங்கியுள்ளார். பறித்த சலுகைகளை புதிதாகதருவதைப் போல அறிவிக்கிறார். காவிரிப் பிரச்சினையில் நாம் 25ம் தேதி பிரதமரைப் பார்த்தால் 26ம் தேதி போய் அவர்பார்க்கிறார்.
டெல்டா பகுதி மக்களை ஏமாற்ற அவர் நினைக்கிறார். இதை நாம் மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்ல வேண்டும். மக்களை அவர்எப்படி ஏமாற்றுகிறார், என்னவெல்லாம் செய்யாமல் இருக்கிறார் என்பதை மக்களிடம் தெரியப்படுத்த வேண்டும்.
சாலைப் பணியாளர்களுக்கு வேலை பறிக்கப்பட்டதை விளக்கிக் கூற வேண்டும். நான் பேசியது, எழுதியது, பேராசிரியர் பேசியதுஆகியவற்றை துண்டுப் பிரசுரங்களாக மாற்றி மக்களிடம்விநியோகியுங்கள்.
திமுக ஆயிரம் காலத்துப் பயிர். அதை அழிந்து போகாமல் காக்கும் கடமை, பொறுப்பு அனைவருக்கும் உண்டு என்றார்கருணாநிதி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications