லண்டனில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் அதிகரிப்பு
லண்டன்:
லண்டனில் சமீபத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து இங்கிலாந்தில் முஸ்லிம்களின் மீது தாக்குதல்கள்அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
லண்டனில் கடந்த மாதம் 7ம் தேதி பாதாள ரயில் மற்றும் பஸ்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 55 பேர்பலியானார்கள். இந்த சம்பவம் லண்டன் மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் லண்டனில் கடந்த மாதம் 21ம் தேதி மீண்டும் குண்டு வெடித்தது. இதில் யாரும்காயமடையவில்லை. ஆனாலும் அடுத்தடுத்து நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களால் லண்டன் நகர மக்கள் பீதியில்உறைந்து போனார்கள்.
அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் தான் இன்னும் லண்டன்வாசிகள் உள்ளனர். குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகுலண்டனில் பாதாள ரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த தொடர் குண்டு வெடிப்புக்கு அல் கொய்தா இயக்கம் பொறுப்பேற்றது. மேலும் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள்பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது.
இந் நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு இங்கிலாந்தில் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம்கள் தாக்குதல்கள்அதிகரித்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு இங்கிலாந்தில் மத ரீதியாக 269மோதல் சம்பவங்கள் நடந்துள்ளன.
கடந்த வருடம் 40 சம்பவங்கள் தான் நடந்துள்ளன. கடந்த 1 மாதத்திற்குள் நடந்த மத மோதல் சம்பவங்களில் முஸ்லிம்கள் மீதுநடத்தப்பட்ட தாக்குதல்கள் தான் அதிகம்.
இது தொடர்பாக இங்கிலாந்திலுள்ள முஸ்லிம் பிரமுகர்களுடன் லண்டன் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போதுமுஸ்லிம்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்று போலீஸார் உறுதியளித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications