For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேட்டூர் நீர் மட்டம் 94 அடியைத் தாண்டியது!

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 1 லட்சம் கன அடிக்கும் மேலாக தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர் மட்டம் 94அடியைத் தாண்டியது. இன்று இரவுக்குள் 100 அடியை நீர் மட்டம் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகத்தின் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய இரு அணைகளும் நிரம்பியதைத் தொடர்ந்துஅணைகள் திறக்கப்பட்டுள்ளன. இன்னொரு அணையான ஹோரங்கி அணையும் திறக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று அணைகளிலிருந்தும் மொத்தமாக விநாடிக்கு 1 லட்சத்து 70,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்தத்தண்ணீர் மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியுள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை முதல் கர்நாடக அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியுள்ளது.

ஆரம்பத்தில் விநாடிக்கு 55,000 கன அடி நீராக வந்து கொண்டிருந்த தண்ணீர், இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1லட்சம் கனஅடியைத் தாண்டி வந்து கொண்டுள்ளது. அபரிமிதமான நீர் வரத்து காரணமாக அணையின்ல் நீர் மட்டம் 94 அடியைத்தாண்டியுள்ளது.

இதேபோல நீர் வரத்து இருந்தால் இந்த வார இறுதிக்குள் அணை நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகஅணைகளிலிருந்து அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், ஹோகனேக்கல் பகுதியில் காவிரியில் வெள்ளப் பெருக்குஏற்பட்டுள்ளது.

கரையோரங்களில் உள்ள பல வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. மேட்டூர் அணை நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளதால், அணைப்பகுதிக்கு அருகாமையில் கரையோரங்களில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறுஅறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று ஆடிப்பெருக்கு:

இதற்கிடையே தமிழகத்தில் ஆடிப் பெருக்கு விழா இன்று விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஆடிப் பெருக்கு தினத்தன்றுஆற்றங்கரைக்கு வந்து மண் பிள்ளையார் செய்து அதற்கு பூஜை செய்து படையல் வைப்பர்.

கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் ஆவதற்காக வழிபாடு நடத்தப்படும். சுமங்கலிப் பெண்கள், கணவர் நீண்டஆயுளோடு இருப்பதற்காக சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவர்.

புதுமணத் தம்பதிகள், கல்யாணத்தின் போது அணிந்திருந்த மாலைகள், பூக்களை காவிரி ஆற்றில் விடுவர். ஆடிப் பெருக்கு தினம்விவசாயிகளுக்கும் விசேஷமானது. ஆடிப்பட்டம் தேடி விதை என்பது ஆடிப் பெருக்கு தினத்தை வைத்துத் தான் வந்தது.

இன்று தான் விவசாயப் பணிகளும் தொடங்கப்படும். காவிரி ஆற்றுப் படுகைகளில் ஆடிப் பெருக்கு மிகவும் விமரிசையாககொண்டாடப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக காவிரியில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய்க் கிடந்ததால் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்பட்டது.

லாரிகள் மூலம் ஆற்றில் தண்ணீர் ஊற்றி அங்கு ஆடிப் பெருக்கு விழாவைக் கொண்டாடும் நிலை சில ஆண்டுகளாக நிலவிவந்தது. இந்த ஆண்டு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. கடந்த பல ஆண்டுகளில் முதல் முறையாக காவிரியில் வெள்ளம்கரைபுரண்டு ஓடுகிறது.

இரு பக்க கரைகளையும் தொட்டுக் கொண்டு காவிரி அன்னை உற்சாகமாக உருண்டோடுவதைப் பார்த்து காவிரி ஆற்றுப் படுகைமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடகத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக இந்த ஆண்டு காவிரி ஆற்றில்வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் அணையிலிருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரி ஆறு முழுவதும் தண்ணீர் கரைபுரண்டோடி வருகிறது.இதையடுத்து திருச்சி, தஞ்சை, கரூர் உள்ளிட்ட அனைத்து காவிரிப் படுகைப் பகுதியிலும் இன்று ஆடிப்பெருக்கை மக்கள்உற்சாகமாகக் கொண்டாடி வருகிறார்கள்.

திருச்சியில் அம்மா மண்டபம், படித்துறை, ஸ்ரீரங்கம், முக்கொம்பு, ஓடைத்துறை உள்ளிட்ட அதிக அளவில் மக்கள் கூடும்காவிரி ஆற்றுப் பகுதிகளில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X