பூனைக்குட்டி வெளில வந்துருச்சு! தவெக ஆட்சி பத்தி போக போக இன்னும் பல உண்மை வெளிவரும்! உதயநிதி சுளீர்!
தஞ்சாவூர்: இந்த பத்து நாட்களிலேயே மக்கள், பல பெண்கள், இளைஞர்கள், தவெக ஆட்சியுடைய உண்மையான முகத்தை உணர்ந்திருப்பாங்க! போகப் போக இன்னும் பலருக்கு பல உண்மைகள் தெரிய வரும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், தேர்தல் அரசியலைத்தான் நாம் தோற்றிருக்கோமே தவிர, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கோமே தவிர, கொள்கை அரசியல்ல திராவிட முன்னேற்றக் கழகம் என்னைக்குமே தோற்றது கிடையாது! எனவும் கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் திருமண விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின்," தேர்தல் முடிவு வந்த பிறகு, நம்முடைய தலைவர் அவர்கள் கலந்துகொள்கின்ற முதல் நிகழ்ச்சி, முதல் பொது நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி. திருமண நிகழ்ச்சி இன்னைக்கு ஒரு சாதாரண திருமண நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல், நம்முடைய கழகத்துடைய நிகழ்ச்சியாக இன்னைக்கு மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

மணமகள் திருவாரூர் மாவட்டம், மணமகன் திருச்சி மாவட்டம், திருமணம் நடைபெறுகின்ற இந்த இடம் தஞ்சாவூர் மாவட்டம். மொத்தத்துல இந்த நிகழ்ச்சி, திருமண நிகழ்ச்சி ஒட்டுமொத்த டெல்டா மாவட்டமும் சேர்ந்து ஒரு கூட்டணி அமைச்சு இந்த நிகழ்ச்சியை நடத்திக்கிட்டு இருக்கு.
உதயநிதி ஸ்டாலின்
யார் எந்த பக்கம் போனாலும், எந்த மாவட்டம் எந்த முடிவு எடுத்தாலும், டெல்டா எப்பொழுதுமே திராவிட முன்னேற்றக் கழகம் பக்கம்தான் என்பதை நிரூபிச்சு காட்டிய அத்தனை பேருக்கும் முதல்ல என்னுடைய நன்றியை நான் தெரிவிச்சுக்கிறேன். திருவாரூர் மாவட்டத்துல நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் வளர்வதற்கு ஸ்ட்ராங்கான அந்த பேஸ்மென்ட்டை போட்டவர் நம்முடைய முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள்தான்.
டெல்டா மாவட்டம்
அவரை நீங்க என்னைக்கும் விட்டுக்கொடுக்க மாட்டீங்க. திருவாரூர் மாவட்டம் மட்டும் இல்ல, ஒட்டுமொத்த டெல்டாவுமே இன்னைக்கு கழகத்துடைய கோட்டையாகத்தான் விளங்கி கொண்டிருக்கிறது. கழகத்துடைய வரலாற்றில், அதுவும் குறிப்பாக இந்த டெல்டா பகுதியுடைய அரசியல் வரலாற்றில் அண்ணன் பூண்டி கலைச்செல்வன் அவர்களுடைய பெயர் என்னைக்குமே நிலைச்சு நிற்கும். இன்னைக்கு அண்ணன் கலைச்செல்வன் அவர்களுடைய வழியில, அவருடைய தம்பி நம்முடைய அண்ணன் கலைவாணன் அவர்களும், அவருடைய மகன் தம்பி கலைவேந்தனும், அவங்களுடைய ஒட்டுமொத்த குடும்பமும் இன்னைக்கு கழகத்திற்காக களத்துல இறங்கி உழைச்சுக்கிட்டு இருக்காங்க. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த குடும்ப நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளதில் எனக்கு மிகுந்த பெருமை.
திமுக
தமிழ்நாடு முழுக்க இது மாதிரியான லட்சக்கணக்கான கழகக் குடும்பங்கள் இருக்குறதாலதான் கழகம் எவ்வளவு பெரிய புயலைச் சந்தித்தாலும் நாம் திரும்பத் திரும்ப மீண்டும் எந்திரிச்சு வந்துகிட்டு இருக்கிறோம். இந்தத் திருமணத்தில் இருக்கக்கூடிய எழுச்சியையும் உங்களுடைய மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் பார்க்கும்போது நிச்சயம் நம்முடைய தலைவர், நிச்சயம் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் வெற்றி வாகை சூடும் அப்படிங்கிறதுல எனக்கு எந்தவிதமான சந்தேகமும் கிடையாது.
கலைஞர் கருணாநிதி
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சொன்ன மாதிரி, திராவிட முன்னேற்றக் கழகம் வெறும் அரசியல் இயக்கம் கிடையாது, வெறும் ஒரு கட்சி கிடையாது. அது ஒரு சமுதாய இயக்கம். தேர்தலில் வெற்றி தோல்விங்கிறது எல்லாம் சகஜம். மற்ற கட்சிகளைத்தான் அதெல்லாம் பாதிக்கும். சமுதாய இயக்கம் எப்போதும் போல, நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் போல மக்கள் பணிகளைத் தொடர்ந்து நாங்க செஞ்சுக்கிட்டுதான் இருப்போம். எங்களுடைய தலைவருடைய வழிகாட்டுதல் படி அதை நாங்க தொடர்ந்து செய்வோம்.
தேர்தல் அரசியல்
ஒரே வரியில சொல்லணும்னா, தேர்தல் அரசியலைத்தான் நாம் தோற்றிருக்கோமே தவிர, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கோமே தவிர, கொள்கை அரசியல்ல திராவிட முன்னேற்றக் கழகம் என்னைக்குமே தோத்தது கிடையாது, தோற்கவும் மாட்டோம். எனவே கழக உடன்பிறப்புகள், நாம மீண்டும் எப்போதும் போல நம்முடைய களப்பணியை, மக்கள் பணியைத் தொடருவோம்.
எதிர்க்கட்சி
ஆளுங்கட்சியா இருந்தப்ப மட்டும் இல்லாம, எதிர்க்கட்சியா இருக்கப்போகும் நமக்கும், நமக்கு வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்லாம, வாக்களிக்காம போன மக்களுக்கும் சேர்த்தே நம்முடைய தலைவர் எப்போதும் சொல்வது போல நாம உழைப்போம். நாம தமிழ்நாட்டுக்கு வருகின்ற ஆபத்துகளை எல்லாம் நிச்சயம் தடுத்து நிறுத்துவோம். மாநில உரிமைகளை நிச்சயம் காப்போம். இப்பவே இந்த பத்து நாட்களிலேயே மக்கள், பல பெண்கள், இளைஞர்கள், இந்த ஆட்சியுடைய உண்மையான முகத்தை உணர்ந்திருப்பாங்க. போகப் போக இன்னும் பலருக்கு பல உண்மைகள் தெரிய வரும்.
கிலுகிலுப்பை ஆட்சி
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சொன்ன ஒரு உதாரணத்தை இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன். தாயின் பாதுகாப்பில் இருக்கக்கூடிய ஒரு குழந்தை, கிலுகிலுப்பை ஆட்டி விளையாட்டு காமிக்கிற ஒரு ஆளைப் பார்த்து நிச்சயம் மயங்கும், மகிழ்ச்சியடையும். தாய்கிட்ட இருந்து தாவி அந்த கிலுகிலுப்பை ஆட்டுறவன்கிட்ட கொஞ்ச நேரம் போய் உக்காந்துக்கும். ஆனா அந்தக் குழந்தை கிலுகிலுப்பை காட்டுறவன்கிட்ட நிரந்தரமா இருந்திடாது. கொஞ்ச நேரத்துக்குப் பிறகு அதுக்கு உண்மையான பாசம்னா என்னன்னு தெரியும். தாயோட முகத்தை நிச்சயம் தேடிப் பார்க்கும். தாய்கிட்டத்தான் மீண்டும் திரும்பி வரும்.
சூரியன் உதிக்கும்
அது மாதிரி இப்ப கவர்ச்சி, மாயாஜாலத்தைக் காட்டி மக்களைச் சிலர் ஈர்த்திருக்காங்க. இந்த கவர்ச்சி மக்களுடைய கஷ்டத்தைப் போக்காது. அடிப்படைப் பணிகளை நிறைவேத்தாது. எந்தப் பிரச்சினைக்கும் அது தீர்வு காணாது. எனவே தாயோட அன்புக்கு ஈடாக எதுவும் இல்ல அப்படிங்கிறத அந்தக் குழந்தை மீண்டும் உணர்ந்து, தமிழ்நாட்டுக்குத் தாயாக இருக்கக்கூடிய நம்முடைய கழகத்தை, நம்முடைய தலைவரை நோக்கி நிச்சயம் அந்தக் குழந்தை விரைவில் வரும். நம்முடைய தலைவர் அவர்கள் சொன்னது போல சூரியன் ஒருபோதும் மறையாது, அது மறுபடியும் உதிக்கும். அதன் ஒளியில தமிழ்நாடு மீண்டும் செழிக்கும்." என்றார்.












Click it and Unblock the Notifications