டாஸ்மாக் 100000 கோடி ஊழல்? 19 ஆலை அதிபர்களின் பின்னணி உடைத்து சென்னையை அதிரவைத்த டாக்டர் கிருஷ்ணசாமி
சென்னை: தமிழக அரசின் டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. இத்துடன் மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் அந்த அறிக்கையின் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.. தமிழகத்தில் மதுபான விற்பனை மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் தொடர்ந்து விவாதப் பொருளாக உள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது..
ஆண்டுதோறும் தமிழக அரசுக்கு சுமார் 50,000 கோடி ரூபாய் வருவாயை ஈட்டித் தரும் ஒரு துறையாக டாஸ்மாக் விளங்குவதை சுட்டிக்காட்டியுள்ள கிருஷ்ணசாமி, இந்த நிர்வாகப் பின்னணியில் கடந்த கால ஆட்சியாளர்களின் பினாமிகளாகச் செயல்படும் 19 மதுபான உற்பத்தி ஆலை அதிபர்கள் இருப்பதாக நேரடியாகக் குற்றம் சாட்டினார்.

டாஸ்மாக் 100000 கோடி ஊழல்?
இந்த ஆலை அதிபர்கள் பெருமளவில் பணத்தைக் கொள்ளையடிப்பதன் காரணமாக, ஒட்டுமொத்த தமிழகத்தின் பொருளாதாரமும் ஒரு சில தனிநபர்களின் கைகளில் முடங்கிக் கிடப்பதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.. மாநிலத்தின் நிதி நிலைமை மற்றும் மக்களின் வாங்கும் திறன் பாதிக்கப்படுவதற்கு இதுவே முக்கிய காரணம் என்றும் அவர் விளக்கியுள்ளார்..
டாஸ்மாக் கடைகளில் தினசரி நடக்கும் முறைகேடுகள் குறித்தும் பல்வேறு புகார்களைத் தனது அறிக்கையில் அவர் பட்டியலிட்டுள்ளார்.. அதன்படி, தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளில் ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது..
டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
பார்' டெண்டர்கள் வழங்குவதிலும் பெரும் முறைகேடுகள் நடக்கின்றன.. மேலும், விதிகளுக்குப் புறம்பாக பல இடங்களில் மனமகிழ் மன்றங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது..
இத்தகைய முறைகேடுகளின் காரணமாக, ஆண்டுக்குக் குறைந்தது ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் அரங்கேறி வருவதாக டாக்டர் கிருஷ்ணசாமி தனது அறிக்கையில் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.. இந்த நிதி இழப்புகள் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதும் அவரது கோரிக்கையாக உள்ளது..
அரசு டாஸ்மாக் கடைகள்
அரசு அண்மையில் எடுத்த சில நடவடிக்கைகள் குறித்தும் அவர் தனது கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார்.. தற்போது தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ள 4,765 மதுக்கடைகளில் வெறும் 717 கடைகளை மட்டும் மூடுவதாக அரசு அறிவித்துள்ளதை மூத்த தலைவர் கிருஷ்ணசாமி சுட்டிக்காட்டினார்.
இந்த சொற்ப எண்ணிக்கையிலான கடைகளை மூடுவதால் சமூகத்தில் எந்தவிதமான அடிப்படை மாற்றமும் நிகழ்ந்து விடப் போவதில்லை என்பது அவரது வாதம்.. ஒருபுறம் கடைகளை மூடுவதாகக் கூறிக்கொண்டு, மறுபுறம் மனமகிழ் மன்றங்கள் எனும் பெயரில் நவீன பார்கள் பெருகுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் சாடியுள்ளார்.. இந்த நவீன பார்கள் மூலமாக மது கலாச்சாரம் இளைஞர்களிடம் மேலும் தீவிரமடைந்து வருவதாகவும் டாக்டர் கிருஷ்ணசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்..
பூரண மதுவிலக்கு
மொத்தத்தில், மதுபான வருமானமின்றி தமிழக அரசு இயங்காது என்ற நிலையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதே புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாடாக உள்ளது..
மதுவினால் ஏற்படும் சமூக சீரழிவுகளையும் குற்றச் சம்பவங்களையும் கட்டுப்படுத்த முழுமையான தடை மட்டுமே தீர்வாக அமையும்.. மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டு, தமிழக அரசு உடனடியாகப் பூரண மது விலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி தனது அறிக்கையின் நிறைவாகக் கோரிக்கை விடுத்துள்ளார்..
-
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
பாஸ் ஆயிட்டாரா CM விஜய்? 1 மாத கால தவெக ஆட்சி எப்படி இருக்கு? 30 நாளில் திணறடித்த 4 அமைச்சர்கள் -
டெல்லியில் விஜய்.. நாளை பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.. என்ன மேட்டர்? -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications