மூளை இறந்த பெண்ணுக்கு பிரசவம்: அமெரிக்க டாக்டர்கள் சாதனை
ரிச்மண்ட்:
மூளை செயல்படாமல் போய்விட்ட நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பெண்ணுக்கு பிரசவம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் ரிச்மண்ட் நகரைச் சேர்ந்த சூசன் டோரஸ் என்ற 26 வயது பெண்ணுக்கு கடந்த மே மாதம் மூளையில் ரத்தஅடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது மூளை செயல்படாமல் போனது. ஆனால், அப்போது அவர் கர்ப்பிணியாகஇருந்தார்.இதையடுத்து அவரது மூளை செயற்கையான நரம்புக் கட்டுப்பாட்டு முறையில் செயல்பட வைக்கப்பட்டது. கர்ப்பிணியானஅவரது சிசு வளரும் வரை அவரை உயிருடன் வைக்க கடும் முயற்சி எடுக்கப்பட்டது.
ரிச்மண்டில் உள்ள நேசனல் இன்ஸ்டியூட் ஆப் ஹெல்த் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் சூசன் லைப்-சப்போர்ட் சிஸ்டத்தின்உதவியுடன் உயிருடன் வைக்கப்பட்டிருந்தார். இதற்கு அதிகமான செலவானதால் நிதி உதவி கோரி அவரது கணவர் ஒருஇணையத் தளத்தைத் துவக்கினார்.
அந்த இணையத் தளம் மூலம் 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் நிதி உலகெங்கும் இருந்தும் குவிந்தது.
இந் நிலையில் சூசன் நேற்று பெண் குழந்தையை பிரசவித்தார். சிசேரியன் முறையில் அந்தக் குழந்தை வெளியில் எடுக்கப்பட்டது.குழந்தை மிகவும் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
25 வாரங்களே ஆன நிலையில் அந்தக் குழந்தை வெளியில் எடுக்கப்பட்டுவிட்டது. இப்போது அந்தக் குழந்தை ஆர்லிங்டனில்உள்ள விர்ஜினியா மருத்துவமனையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications