தனியார் பொறியியல் கல்லூரி நுழைவுத் தேர்வுக்கு தடை இல்லை!
சென்னை:
தனியார் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை நடைபெறவுள்ள நுழைவுத் தேர்வுக்கு தடை விதிக்கமுடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தனியார் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் வரும் மாணவர் இடங்களைநிரப்ப தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.இந்தத் தேர்வை நடத்த பெரும்பான்மையான பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட கூட்டமைப்புக்கு,தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி சுப்ரமணியம் கமிட்டி அனுமதி வழங்கும்.
இந்த ஆண்டுக்கான நுழைவுத் தேர்வை நடத்துவதற்கு ஜேப்பியார் தலைமையிலான தமிழக கலை மற்றும் அறிவியல்கல்லூரிகள் கூட்டமைப்பும், டி.டி.நாயுடு தலைமையிலான அகில இந்திய பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள்கூட்டமைப்பும் அனுமதி கோரியிருந்தன.
இதில் ஜேப்பியார் தலைமையிலான கூட்டமைப்பில் அதிக அளவிலான கல்லூரிகள் இடம் பெற்றிருப்பதால் அந்தக்கூட்டமைப்புக்கே நுழைவுத் தேர்வை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் டி.டி.நாயுடு தலைமையிலான சங்கம் வழக்கு தொடர்ந்தது. அந்த நுழைவுத்தேர்வுக்கு தடை விதிக்கக் கோரி மனுவில் கூறப்பட்டிருந்தது
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, நுழைவுத் தேர்வு நடத்துவதற்குத் தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பளித்தார்.இதையடுத்து டிவிஷன் பெஞ்ச் முன்பு நாயுடு சங்கத்தினர் மேல் முறையீடு செய்தனர்.
இந்த மனு தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையிலான பெஞ்ச் முன்புவிசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், நுழைவுத் தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டு விட்டன.
இந் நிலையில், தடை விதிப்பது இயலாத காரியம் என்று கூறினர். இதைத் தொடர்ந்து மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகமனுதாரரின் வழக்கறிஞர் கூறினார். இதையடுத்து மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications