தர்மபுரி பஸ் எரிப்பு: கிராம நிர்வாக அதிகாரி பரபரப்பு சாட்சியம்

Subscribe to Oneindia Tamil

சேலம்:

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் கிராம நிர்வாக அதிகாரி அனைத்து குற்றவாளிகளையும் அடையாளம் காட்டி நேற்று பரபரப்புசாட்சியம் அளித்தார்.

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதுவரை இந்த வழக்கில்பஸ்ஸில் பயணம் செய்த பல்கலைக்கழக மாணவிகள், பஸ் டிரைவர் உட்பட 87 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.

வழக்கின் மிக முக்கிய சாட்சியாக இருப்பவர் விருப்பாச்சிபுரம் கிராம நிர்வாக அதிகாரி ராமசுந்தரம். சம்பவம் நடந்தஇலக்கியம்பட்டி இந்த கிராமத்தின் எல்லைக்குள் தான் உள்ளது. இவரிடம் நேற்று விசாரணைை நடந்தது.

நீதிபதி கிருஷ்ணராஜா முன்னிலையில் நடந்த இந்த விசாரணையில், அரசுத் தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் சீனிவாசனும், எதிர்தரப்பில் வழக்கறிஞர்கள் கந்தசாமி மற்றும் பார்த்தசாரதி ஆகியோர் ஆஜராகினர்.

கிராம நிர்வாக அதிகாரி ராமசுந்தரம் கூறுகையில், சம்பவம் நடந்த அன்று ஒரு விசாரணை தொடர்பாக ஜவகர் என்ற ஐஏஎஸ்அதிகாரி வந்திருந்தார். அவருக்கு உதவியாக இருக்குமாறு எனக்கு தாசில்தார் உத்தரவிட்டார். நான் அன்று காலை எனதுஉதவியாளர் சாமுண்டியுடன், அந்த அதிகாரியை தர்மபுரி அரசு விருந்தினர் மாளிகையில் சந்தித்தேன்.

பின்னர் அவரது உதவியாளர் எங்களை திரும்பி செல்லுமாறு கூறிவிட்டார். இதனால் நானும், எனது உதவியாளரும் மொபட்டில்கிளம்பினோம். அப்போது பார்வதிபுரம் அருகே அதிமுக.வினர் சாலை மறியல் செய்து கொண்டிருந்தனர்.

அந்த இடத்தில் நின்றிருந்த போக்குவரத்து போலீஸ் ஒருவரிடம் என்ன விபரம் என்று கேட்டேன். அதற்கு அவர்,ஜெயலலிதாவுக்கு கொடக்கானல் ஹோட்டல் வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதை எதிர்த்துஅதிமுகவினர் மறியல் செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

பஸ் எரிப்பு:

அதனால் உடனடியாக நானும் , சாமுண்டியும் அங்கிருந்து கிளம்பினோம். வழியில் சாமுண்டியை அவரது வீட்டில்இறக்கிவிட்டேன். சாப்பிட்டதும் தாசில்தார் அலுவலகம் வர சொல்லிவிட்டு நான் புறப்பட்டேன்.

நானும் சாப்பிட்டு முடித்து மதியம் 2.30 மணிக்கு தாசில்தார் அலுவலகம் சென்றேன். அங்கு வந்திருந்த சாமுண்டி மிகவும்பதட்டத்துடன், பார்வதிபுரம் அருகில் கல்லூரி பஸ் தீ வைக்கப்பட்டதாக வழியில் பேசிக்கொள்கின்றனர் என்றார். இது குறித்துதாசில்தாரிடம் தெரிவிக்க சென்றேன். அவர் அங்கு இல்லை, துணை தாசில்தாரும் இல்லை.

எனவே நானும், சாமுண்டியும் பார்வதிபுரம் சென்றோம். அங்கு கோவை வேளாண் பல்கலைக்கழக பஸ் எரிந்து கொண்டிருந்தது.தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கொண்டிருந்தனர். மாணவ மாணவியர் அலறிக் கொண்டிருந்தனர்.

நான் விசாரித்தபோது, கல்லூரி பேராசிரியை இருவர் என்னிடம் வந்து, 3 மாணவியர் குறைவாக இருப்பதாகவும், அவர்கள்தீயில் சிக்கி கொண்டார்களா என்றும் பேராசிரியைகள் பதட்டத்துடன் கேட்டனர்.

நெடுஞ்செழியனும், ரவீந்திரனும் தான் பஸ்சுக்கு தீ வைத்ததாக பொதுமக்கள் கூறினர். உடனடியாக நான் தர்மபுரி சென்றுபோலீஸில் புகார் செய்ய சென்றேன். நான் பதட்டத்துடன் இருந்ததால் என்னால் புகார் எழுத முடியவில்லை.

ஸ்டேஷனில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் கூறியபடி புகார் எழுதினேன். புகாரில் வேலாயுதம், நெடுஞ்செழியன், முருகேசன்,டெய்லர் மணி, அவுலத் பாஷா, அறிவழகன், வடிவேல், தங்கப்பன், மாது என்கிற ரவீந்திரன், ரவி, முருகன், அதகப்பாடி முருகன்ஆகியோரின் பெயரை தெரிவித்திருந்தேன்.

இவர்கள் அனைவரையும் எனக்கு நன்றாக அடையாளம் தெரியும். பின்னர் முதல் தகவல் அறிக்கை நகலைப் பெற்று கொண்டுமாலையில் மீண்டும் சம்பவ இடத்திற்கு சென்றேன்.

போலீஸார், இறந்த மாணவியரின் உடலை 2 ஆம்புலன்ஸ்களில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர்இரவில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர், குற்றவாளிகளின் வீடுகளை அடையாளம் காட்ட சொன்னார். நான் சென்ற போது அவர்களதுவீடுகள் அனைத்தும் பூட்டப்பட்டிருந்தது.

பின்னர் அன்று இரவே தர்மபுரி வெள்ளாளம்பட்டி செல்லும் சாலையில் நின்றிருந்த டெய்லர் மணி, பவலூர் முருகன், முருகேசன்,வேலாயுதம், செல்லக்கோட்டை முருகன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர் என்றார்.

பின்னர் அவரிடம் அரசு வழக்கறிஞர் சீனிவாசன், இந்த வழக்கில் தொடர்புடையவர்களை அடையாளம் காட்டி முடியுமா என்றுகேட்டார். அதற்கு ராமசுந்தரம், சரி என்று கூறி, முருகேசன், தவுலத் பாஷா, வேலாயுதம், மணி, ராஜேந்திரன், ரவீந்திரன், பவலூர்முருகன், அதகப்பாடி முருகன், அறிவழகன், ரவி, வடிவேல், நஞ்சப்பன், சுரேஷ்குமார் ஆகியோரை அடையாளம் காட்டினார்.

இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நடந்த போது, இதே கிராம நிர்வாக அதிகாரி ராமசுந்தரம் சாட்சியம்அளித்த போது தனக்கு யாரையுமே தெரியாது என்று கூறினார். ஆனால் நேற்று அவர் சாட்சியம் அளிகும் போது நடந்த சம்பவம்முழுவதையும் கூறி, அனைவரையும் அடையாளம் காட்டியது வழக்கில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+