ஹஜ் பயணம்: பிரதமரிடம் திமுக கூட்டணி மனு
டெல்லி:
ஹஜ் பயணத்திற்கான தமிழக ஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரி திமுக கூட்டணிக் கட்சி அமைச்சர்கள், எம்.பிக்கள் பிரதமர்மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.
ஆண்டு தோறும் தமிழகத்திலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகள் தமிழக ஹஜ் கமிட்டியிடம் விண்ணப்பம்கொடுப்பார்கள். தமிழக அரசு பயணிகளின் விண்ணப்பங்களைப் பரிசீலித்து, அவர்களிலிருந்து தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டஎண்ணிக்கையிலான பயணிகளைத் தேர்வு செய்து பயணத்திற்கு அனுப்பும்.இந்த ஆண்டுக்கான ஹஜ் பயணத்திற்காக 3500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் 3004 பேருக்கு மட்டுமேஅனுமதி என்று மத்திய ஹஜ் கமிட்டி தமிழக அரசிடம் தெரிவித்துள்ளது. தற்போது வந்துள்ள விண்ணப்பங்களிலிருந்துகுலுக்கல் முறையில் 3004 பேரை தேர்வு செய்யுமாறு தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து தமிழகதிதற்கான ஒதுக்கீட்டை அதிகரித்து, விண்ணப்பித்துள்ள அனைவரும் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளஅனுமதிக்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதா மத்திய வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங்குக்கு கடிதம்எழுதியிருந்தார்.
இதைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இதே கோரிக்கையை வலியுறுத்தி கடிதம்எழுதினார்.
இதன் தொடர்ச்சியாக திமுக கூட்டணியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், வேங்கடபதிமற்றும் திமுக, பாமக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்.பிக்கள் அடங்கிய குழு டெல்லி சென்று பிரதமரை நேரில்சந்தித்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி இன்று மனு கொடுத்தனர்.
பிரதமருக்கு கருணாநிதி கடிதம்:
இதற்கிடையே பிரதமர் மன்மோகன் சிங்குக்கு திமுக தலைவர் கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில் ஒரு கடிதத்தில் 2005-06ம்ஆண்டில் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு 3,939 விண்ணப்பங்கள் தமிழ்நாடு ஹஜ் கமிட்டிக்கு வரப்பெற்றது எனவும்,ஆனால் 3,004 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது எனவும் அறிகிறேன்.
நான் முதல்வராக இருந்த போது எண்ணிக்கையில் உச்சவரம்பின்றி விண்ணப்பித்த அனைவரும் ஹஜ் பயணம் மேற்கொள்ளஅனுமதிக்கப்பட்டனர் என்பதை நினைவு கூற விரும்புகிறேன்.
இந்த முறையே சென்ற ஆண்டு வரை பின்பற்றப்பட்டிருக்கிறது. எனவே தமிழ்நாட்டில் விண்ணப்பித்த அனைவரையும் ஹஜ்புனித பயணம் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications