சொத்துக் குவிப்பு: ஜெ. வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை- திமுக மனு மீது நடவடிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கையும், லண்டனில் ஹோட்டல் வாங்கிய வழக்கையும் ஒன்றாக சேர்த்துவிசாரிக்கத் தடை கோரும் திமுகவின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் பெங்களூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்தவழக்குகளின் விசாரணைக்கு இடைக்காலத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

வருமானத்தை மீறி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, தினகரன், சுதாகரன் ஆகிய 5 பேரும் ரூ. 65 கோடி சொத்து சேர்த்ததுதொடர்பாக திமுக ஆட்சியில் வழக்குத் தொடரப்பட்டது.

மேலும் ஜெயலலிதாவும் தினகரனும் திடீரென உலகப் பணக்காரர்களாகி லண்டனில் ஒரு ஹோட்டலை பல கோடிக்கு வாங்கினர்.இது தொடர்பாகவும் ஒரு வழக்குப் போடப்பட்டது.

இந்த இரு வழக்கு விசாரணைகளையும் இழு இழு என இழுத்தடித்தார் மீண்டும் முதல்வரான ஜெயலலிதா. வழக்கில் இருந்துஜெயலலிதா அண்ட் கோ தப்ப முயற்சிப்பதாகவும், இந்த விசாரணை தமிழகத்தில் நடந்தால் நீதி கிடைக்காது என்றும் கூறி உச்சநீதிமன்றத்தை அனுகினார் திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன்.

அவரது மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜெயலலிதா தரப்புக்கு மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து வழக்கையேபெங்களூர் நீதிமன்றத்துக்கு மாற்றியது. ஆனாலும், ஆவணங்களைத் தராமல் இழுத்தடிப்பு செய்தது ஜெயலலிதா தரப்பு.

ஒரு வழியாக நீண்ட கால தாமத்துக்குப் பின் பெங்களூரில் விசாரணை தொடங்கி நடந்து வருகிறது. ஆனால், வழக்குகளைமேலும் இழுத்தடிக்கும் நோக்கில் மனுக்கள் மேல் மனுக்கள் போட்டு வருகிறார்கள் ஜெயலலிதாவும் குற்றம் சாட்டப்பட்டமற்றவர்களும்.

அதில் சொத்துக் குவிப்பு மற்றும் லண்டன் ஹோட்டல் வாங்கியது ஆகிய வழக்குகளை ஒன்றாக சேர்க்க வேண்டும் என்றகோரிக்கையும் ஒன்று. இந்தக் கோரிக்கையை பெங்களூர் தனி நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ஜெயலலிதா.

அங்கு வழக்குகளை இணைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து இரு வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டன.

இந் நிலையில் வழக்குகள் இணைக்கப்பட்டதால் ஜெயலலிதா மீது புதிதாக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும்,அதற்கு மீண்டும் உரிய அனுமதி பெற வேண்டும் என்றும், ஜெயலலிதா மீது வழக்குப் பதிவு செய்ய கவர்னர் அனுமதித்ததுசெல்லாது என்றும், அதற்குப் பதிலாக தமிழக சட்டமன்ற சபாநாயகரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்றும் புதிதாக ஒருமனுவை ஜெயலலிதா தரப்பு தாக்கல் செய்துள்ளது.

முன்னதாக இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி ஜெயலலிதா, இளவரசி, தினகரன் ஆகியோர் தனித்தனியாக மனுக்கள்தாக்கல் செய்துள்ளனர்.

இவையெல்லாமே வழக்கை மேலும் இழுத்தடித்த ஜெயலலிதா தரப்பு செய்யும் முயற்சி என அரசுத் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இந் நிலையில் வழக்கு போகும் போக்கில் ஏற்பட்டுள்ள திருப்பங்களால் அதிர்ந்து போயுள்ள திமுக தரப்பு உச்ச நீதிமன்றத்தில் ஒருமனு தாக்கல் செய்துள்ளது. பொதுச் செயலாளர் அன்பழகன் மூலமாக போடப்பட்டுள்ள அந்த மனுவில்,

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு மற்றும் லண்டனில் ஹோட்டல் வாங்கிய வழக்கு ஆகியவற்றை ஒரேவழக்காக இணைத்து விசாரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை இன்று விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக நடக்கும்வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+