ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிச்சயம் இடம் கிடைக்கும்: கலாம்
ஹைதராபாத்:
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு ஒரு நாள் நிச்சயம் நிரந்தர இடம் கிடைத்தே தீரும் எனஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார்.
ஹைதராபாத் வந்த கலாம் அங்குள்ள ஜூப்ளி ஹில்ஸ் உயர் நிலைப் பள்ளிக்குச் சென்றார். அங்கு மாணவ, மாணவிகளுடன் அவர்20 நிமிடங்கள் கலந்துரையாடினார். அப்போது மாணவர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.அவர் கூறுகையில், நமது நாடு 100 கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்டது. இதனால் நமக்கு ஐ.நா. சபையின் பாதுகாப்புகவுன்சிலில் நிரந்தர இடம் கிடைத்தே ஆக வேண்டும். அது நமது உரிமை. ஒரு நாள் அந்த இடம் நமக்கு நிச்சயம் கிடைக்கும்என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.
முன்பு விஞ்ஞானியாக இருந்ததற்கும் இப்போது ஜனாதிபதியாக இருப்பதற்கும் என்ன பெரிய வித்தியாசத்தை உணர்கிறீர்கள்என்று ஒரு மாணவன் கேட்டதற்கு பதிலளித்த கலாம்,
எந்த பெரிய வித்தியாசமும் இல்லை. எனது விஞ்ஞானப் பணிகளை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறேன். அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அங்கு ஒரு ஆராய்ச்சித் திட்டத்திலும் ஈடுபட்டிருந்தேன்.இப்போதும் தொடர்ந்து அந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டு தான் இருக்கிறேன்.
ஜனாதிபதி ஆகிவிட்டதால் ஆராய்ச்சிகள் தொடர்பாக நான் எதையும் இழந்துவிடவில்லை. இன்னும் எனது மாணவர்களுக்குநான் ஆராய்ச்சிகளில் உதவிக் கொண்டு தான் இருக்கிறேன்.
மேலும் மன நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவது தொடர்பான ஒரு ஆராய்ச்சியில் நானும் சக மாணவர்களும்தொடர்ந்து ஈடுபட்டுள்ளோம். மூளை பாதிப்பால் நினைவுகளை இழந்த குழந்தைகளுக்கு அந்த நினைவுகளைத் திரும்பக்கிடைக்கச் செய்வது தொடர்பான ஒரு ஆராய்ச்சி அது. அதில் நான் இப்போதும் பங்கேற்றுள்ளேன்.
விவசாயம், கல்வி, மருத்துவ நலம், தகவல் தொழில்நுட்பம், அடிப்படைக் கட்டமைப்பு வளர்ச்சி, நதிகளை இணைப்பதுஆகியவற்றில் நாம் மேலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். நிச்சயம் அதைச் செலுத்துவோம் என்றார் கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications