மும்பையை பிரிக்கும் முன் சென்னையை பிரிக்கலாம்: பால் தாக்கரே

Subscribe to Oneindia Tamil

மும்பை:

மகாராஷ்டிரத்தில் இருந்து மும்பையைப் பிரிக்கும் முன் தமிழகத்தில் இருந்து சென்னையைப் பிரிக்க வேண்டும் என்று மத்தியநிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு சிவசேனை மீண்டும் சூடு கொடுத்துள்ளது.

சமீபத்தில் மழை வெள்ளத்தில் மும்பை சின்னாபின்னாவானது. இன்னும் அங்கு சகஜ நிலை திரும்பாத நிலையில் நகரில் ரூ.10,000 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந் நிலையில் மும்பையை முறையாகப் பராமரிக்கும் வகையில் அதை தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்றுகுரல் எழுந்துள்ளது.

பெரிய அளவில் மக்கள் தொகை கொண்ட மும்பையை மகாராஷ்டிரத்தில் இருந்து பிரிக்க வேண்டும் என்று பல காலமாகவேகோரிக்கை விடப்பட்டு வருகிறது. இப்போது அந்தக் கோரிக்கை வலுவடைந்துள்ளது.

நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய சமாஜ்வாடிக் கட்சியின் எம்பியும் நடிகர் அமிதாப்பச்சனின் மனைவியுமான ஜெயா பச்சன்,மும்பையை சரியாகப் பராமரிக்க வேண்டுமானால், மக்களுக்கு உரிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டுமானால் அதைமகாாஷ்டிரத்தில் இருந்து தனியாகப் பிரிக்க வேண்டும் என்றார்.

இதை சிவசேனை மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளது. அக் கட்சியின் தலைவர் பால் தாக்க தனது சாம்னா இதழில் எழுதியுள்ளகட்டுரையில்,

ஜெயா பச்சன் கடந்த பல ஆண்டுகளாகவே மும்பையில் தான் வசித்து வருகிறார். ஆனால், இப்போது அதை மகாராஷ்டிரத்தில்இருந்து பிரிக்கச் சொல்கிறார். மும்பையைப் பிரிக்கச் சொல்லும் யாரையும் நாங்கள் மன்னிக்க மாட்டோம்.

நாடாளுமன்றத்தில் ஜெயா பச்சன் பேசியதைக் கேட்டு அவரது கணவர் அமிதாப் பச்சன் கூட தனது தலையை சுவரில்முட்டியிருப்பார்.

மும்பையைப் பிரிக்க சதி நடக்கிறதோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. முன்பு நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூட இப்படித் தான்மும்பையை தனி பிரதேசமாக்க வேண்டும் என்று பேசினார். முதலில் தமிழகத்தில் இருந்து சென்னையைப் பிரித்துவிட்டு மும்பைபிரிப்பை பற்றிப் பேசுமாறு அவருக்கு ராஜ் தாக்கரே (பால்தாக்கரேயின் மகன்) கடுமையான பதிலடி தந்தார்.

அதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறோம்.

மும்பையைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என்று பிரபல வழக்கறிஞரான பாலி நாரிமன் தான் ராஜ்யசபாவில் பிரச்சனையைக்கிளப்பினார். அன்று மட்டும் சிவசேனை எம்பிக்கள் அங்கிருந்திருந்தால் அவருக்கு சரியான பதிலடி தந்திருப்பார்கள்.

மும்பை மகாஷ்டிரத்துடனேயே இருக்க வேண்டும் என்பதற்காக நடந்த போராட்டத்தில் 150 பேர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர்என்பதை நினைவூட்ட விரும்புகிறோம்.

இவ்வாறு பால் தாக்கரே கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+